UAE Tamil Web

மசாஜ் ஆசை காட்டி வலைவிரித்த 3 பெண்கள்.! விபரீதம் தெரியாமல் சிக்கி கொண்ட நபர்..

dubaicourt

அமீரகத்தில் போலி சமூக ஊடக கணக்கு மூலம் ஒரு நபரை தங்கள் இடத்திற்கு வரவழைத்து, அவரிடம் 280,050 திர்ஹம்ஸ் பணம் மற்றும் தொலைபேசியை கொள்ளையடித்ததாக 3 ஆப்பிரிக்க பெண்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற ஆவணங்களின்படி இச்சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதி நடந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 3 ஆப்பிரிக்க பெண்களும் பிரபலமான சமூக ஊடக ஆப் ஒன்றில் வேறு சில அழகான பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி தாங்கள் மசாஜ் சேவைகளை வழங்குவதாக குறிப்பிட்டிருந்தனர்.

இதனை பார்த்த பாதிக்கப்பட்டவர் மசாஜிற்கு ஆசைப்பட்டு அந்த பெண்களைத் தொடர்பு கொண்டு விவரம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மசாஜ் செய்ய வேண்டுமென்றால் நேரில் தங்களது பிளாட்டிற்கு வருமாறு கூறியுள்ளனர். இதனை அடுத்து அந்த நபர் கடந்த நவம்பர் 14-ம் தேதி அந்த பெண்களை அவர்கள் பிளாட்டில் சந்திக்க ஒப்புக்கொண்டார்.

பெண்களிடம் மசாஜ் செய்து கொள்ளப்போகிறோம் என்று ஆசை ஆசையாய் அவர்கள் வர சொன்ன பிளாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும் 3 ஆப்பிரிக்க பெண்களும் சேர்ந்து கத்தியை காட்டி அவரை அடைத்து வைத்து, அவருடைய வங்கி விவரங்கள் அனைத்தையும் கேட்டு மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அவரது ஆன்லைன் வங்கி app-ஐ பயன்படுத்தி அவரது வங்கிக் கணக்கிலிருந்து தங்களுக்கு தேவையான பிற கணக்குகளுக்கு பணத்தை அவரையே மாற்ற செய்துள்ளனர்.

3 பெண்களில் ஒருவர் தனது கணக்கிற்கு அவரை பணத்தை மாற்ற செய்து அதனை தனது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி 30,000 திர்ஹம்ஸ் பணத்தை எடுத்துள்ளார்.தவிர பாதிக்கப்பட்டவரின் பணப்பையில் இருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு, அவரது 3800 திர்ஹம்ஸ் மதிப்புடைய ஸ்மார்ட் போனையும் பறித்து கொண்டுள்ளனர். இந்த திருட்டு வேலை முழுவதையும் செய்வதற்காக அவரை அடுத்த நாள் வரை தங்களது கட்டுப்பாட்டில் சிறை வைத்திருந்தனர் அந்த 3 பெண்கள்.

காரியம் முடிந்ததும் அவரை அடித்து விரட்டியுள்ளனர். பின் பாதிக்கப்பட்டவர் சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்தார். தீவிர விசாரணைக்கு பின் அவர்கள் அந்த  3 ஆப்பிரிக்க பெண்களையும் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

dubaicourt
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap