UAE Tamil Web

முக்கியமான அறுவை சிகிச்சையில் அலட்சியம் காட்டிய மருத்துவர்.! பாதிக்கப்பட்டவருக்கு நீதிமன்றம் வழங்க உத்தரவிட்ட இழப்பீடு தொகை எவ்வளவு.?

operation

அறுவை சிகிச்சை ஒன்றின் போது ஒரு நோயாளிக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு டாக்டர் ஒருவருக்கும், அவர் பணிபுரிந்த மருத்துவமனைக்கும் 100,000 திர்ஹம்ஸ் இழப்பீடு பாதிக்கப்பட்டவருக்கு வழங்குமாறு அபுதாபி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- Advertisment -

இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது மருத்துவர் செய்த பிழை காரணமாக, அதே நோயாளிக்கு அவரது சொந்த நாட்டில் இரண்டாவது முறையாக மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.

நீதிமன்ற ஆவணங்களின் படி, உடல்நலக்குறைவு ஏற்பட்டு மார்பு வலியால் அவதிப்பட்ட பாதிக்கப்பட்ட நபர் அபுதாபியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சிக்கல்களை தீர்க்க அறுவைசிகிச்சை செய்ய பரிந்துரைத்ததை அடுத்து, அதற்கு ஒப்பு கொண்டு ஆப்பரேஷன் செய்து கொண்டார்.

இருப்பினும் அபுதாபி மருத்துவமனையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.அவர் தனது சொந்த நாட்டிற்கு சென்ற பின்னர் அங்கு அவருக்கு மீண்டும் மார்பு வலி ஏற்பட்டது. இதனை அடுத்து அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று சோதித்த போது, முன்பு செய்யப்பட்ட ஆப்பரேஷனின் போது தவறு நிகழ்ந்துள்ளதாக கூறி, மற்றொரு அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தினர். இதனை அடுத்து அங்கு மற்றொரு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

அவர் மீண்டும் அமீரகம் திரும்பிய அவர் மருத்துவமனை மீதும், அலட்சியமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீதும் புகார் அளித்தார். தன்னுடைய அனைத்து மருத்துவ ஆவணங்களையும் உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களின் குழுவின் விசாரணையில், முதல் அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட மருத்துவ பிழையால் பாதிக்கப்பட்டவர் இரண்டாவது நடைமுறைக்கு உட்பட வேண்டியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

கவனக்குறைவு காரணமாக அறுவை சிகிச்சையின் போது தவறு செய்ததாக மருத்துவமனை மற்றும் மருத்துவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதைத் தொடர்ந்து மருத்துவமனை மற்றும் மருத்துவர் மீது தார்மீக மற்றும் பொருள் சேதங்களுக்கு இழப்பீடு கோரி நோயாளி சிவில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த முதல் நிகழ்வு அபுதாபி சிவில் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவர் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு கூட்டாக 100,000 திர்ஹம்ஸ் இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டது. எனினும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு முதல் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.