UAE Tamil Web

வீட்டின் மேற்கூரையில் இருந்து வழிந்த ஆசிட் – குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்..!

male_rinsing_face-

ஷார்ஜாவின் அல் தாவூன் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள நபர் ஒருவர் தனது குளியலறைக்குள் சென்றுள்ளார். அப்போது துர்நாற்றம் வருவதை அவரால் உணர முடிந்திருக்கிறது. திடீரென அவருடைய உடம்பில் ஏதோ வழிவது போல் இருந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து கடும் எரிச்சல் எடுத்திருக்கிறது. உடனடியாக மேற்கூரையைப் பார்த்திருக்கிறார்.

அதிலிருந்து ஆசிட் வழிந்துகொண்டு இருந்திருக்கிறது. ஆசிட் பட்டதால் அவருடைய முதுகெலும்பு மற்றும் குருத்தெலும்புகளில் பயங்கர காயம் ஏற்பட்டிருக்கிறது. போலவே உடம்பின் மற்ற பகுதிகளிலும் ஆசிட் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடைத்துக்கொண்ட பைப்

காயமடைந்த நபர் தங்கியிருந்த பிளாட்டிற்கு மேல் பிளாட்டில் வசிப்பவர் தனது வீட்டில் உள்ள கழிவறைக் குழாய் அடைத்துக்கொண்டதாக சுத்திகரிப்பு நிறுவனத்தை அழைக்க, அடைப்பை சரிசெய்ய அந்நிறுவனத்தின் சார்பில் தொழிலாளி ஒருவரும் வந்திருக்கிறார்.

பைப்பில் உள்ள அடைப்பை சரிசெய்யும் நோக்கில் ஆசிட்டை ஊற்ற அது சுவற்றைத் துளைத்துக்கொண்டு கீழே உள்ள பிளாட்டிற்குள் வழிந்திருக்கிறது. அந்த நிறுவனம் மீதும், தொழிலாளி மீதும் பாதிக்கப்பட்டவர் வழக்குத் தொடுத்திருக்கிறார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுத்திகரிப்பு நிறுவனத்தினை வழக்கில் இருந்து விடுவித்திருக்கிறது. இருப்பினும் சுத்திகரிப்புப் பணியாளருக்கு 1,100 திர்ஹம்ஸ் அபராதம் விதித்திருக்கிறது.

அந்தப் பணியாளர் கீழே உள்ள பிளாட்டிற்குள் வழியும் அளவிற்கு இந்த வேதிப்பொருள் வீரியம் கொண்டது என தனக்குத் தெரியாது என விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார்.

மேலும், சுத்திகரிப்புப் பணி நடைபெறும் வேளையில் வீட்டினர் அனைவரையும் வெளியேற்றியதாக அப்பணியாளர் தெரிவித்தார். இரு தரப்பையும் கேட்டறிந்த நீதிமன்றம், பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட காயங்களைக் கருத்தில்கொண்டு அந்த பணியாளருக்கு அபராதத்தை விதித்திருக்கிறது.

male_rinsing_face-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap