UAE Tamil Web

“வீட்டு வேலை என்றுதான் சொன்னார்கள்”- விபச்சார விடுதியிலிருந்து துபாய் போலீசால் மீட்கப்பட்ட 16 வயது சிறுமியின் கண்ணீர் கதை..!

teenager sexual abusement

வீட்டு வேலை எனக் கூறி, வங்கதேசத்தைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவரை துபாய்க்கு அழைத்துவந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 6 பேர்கொண்ட கும்பலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருக்கிறது துபாய் நீதிமன்றம். மேலும் தண்டனைக்காலம் முடிவடைந்தவுடன் அவனைவரும் நாடுகடத்தப்படவேண்டும் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

- Advertisment -

5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் கொண்ட இந்த கும்பல் பாதிக்கப்பட்ட பெண்ணின் தோற்றத்தை வயதானவராகக் காட்டி பாஸ்போர்டில் மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அல் காராமா பகுதியில் வீட்டு வேலைக்கு என அழைத்துச்சென்று, விபச்சாரத்தில் அப்பெண்ணை ஈடுபடுத்தியுள்ளனர் நயவஞ்சகர்கள்.

நான் இதனை முதலில்கேட்டு அதிர்ச்சியடைந்தேன். என்னால் முடியாது என கோபமாகக் கத்தினேன். ஆனால் அவர்களுள் ஒருவன் என்னை .. என வீறிட்டு அழத் துவங்கிய பெண்ணை காவல்துறையினர் ஆறுதல்கூறி அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

இடைப்பட்ட காலத்தில் வேறு கட்டிடத்தில் இரண்டுவாரம் அந்தப் பெண் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். அப்போது இரண்டு குற்றவாளிகள் அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள். பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு அப்பெண்ணை அவர்கள் தொடர்ந்து சித்ரவதை செய்திருக்கின்றனர். அப்போதுதான் காவல்துறை இக்கூடத்தினைக் கையும் களவுமாகப் பிடித்திருக்கிறது.

ஆட்கடத்தல், பாலியல் வன்புணர்வு, விபச்சாரம் நடத்தியது ஆகிய குற்றங்களுக்காக இவர்களின்மீது வழக்கு பதியப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 15 நாட்கள் அவகாசம் அளித்திருக்கிறது நீதிமன்றம்.