UAE Tamil Web

பக்காவாக பிளான் போட்டு செய்யப்பட்ட கொலை: குற்றவாளியைக் காட்டிகொடுத்த இரத்தக்கறை..!

dubai police

துபாயில் சமீபத்தில் ரத்தக்கறையின் மூலம் கொலைக் குற்றவாளியை காவல்துறை கைது செய்திருக்கிறது. நுட்பமாக மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொலை வழக்கில் சில மணி நேரங்களில் குற்றவாளியைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

ரத்த வெள்ளம்

ஏமிராட்டி குடும்பம் ஒன்றில் இருந்துதான் அந்த போன்கால் காவல்துறைக்கு வந்தது. தனது வீட்டில் பணிபுரியும் நபர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக உரிமையாளர் தெரிவித்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் தலையில் பலத்த காயத்துடன் இறந்துகிடந்த சடலத்தைக் கைப்பற்றினர்.

இந்த கொலை குறித்து வீட்டு உரிமையாளரிடமும், இறந்தவரின் சகோதரரிடமும் அதே வீட்டில் பணிபுரிந்துவந்த டிரைவரிடமும் காவல்துறை விசாரணை நடத்தியது.

கொலை செய்யப்பட்டவருக்கு தனிப்பட்ட பகைகள் இருந்தனவா என காவல்துறை விசாரணையை மேற்கொண்டது. அதேநேரத்தில் கொலை நடந்த நேரத்தில் வீட்டிலிருந்த நபர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என காவல்துறையினர் விரும்பவே, அந்தக் கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின்போது அந்த வீட்டு டிரைவர் போலீசாரிடம்,” நான் அன்று பிரார்த்தனைக்காக வெளியே சென்றிருந்தேன். காருக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு வீட்டிற்கு வந்ததற்குப் பிறகுதான் எனக்கு விஷயமே தெரியும்” என்றார்.

ரத்தத் துளி..!

விசாரணைகள் வழக்கை மேலும் குழப்பமானதாக மாற்றிய நேரம். டிரைவரின் உடமைகளைப் பார்வையிட்ட சிறப்பு குற்றவியல் பிரிவு அதிகாரிகள் அவருடைய சட்டை ஒன்றில் ரத்தக் கறை இருப்பதைக் கண்டறிந்தனர்.

உடனடியாக அதை ஆய்வுக்கு அனுப்பியதில் அது கொலைசெய்யப்பட்டவரின் ரத்தம் என்பது உறுதியானது. விசாரணையை மேலும் தொடர்ந்த போலீசாரிடம் தனது குற்றத்தை டிரைவர் ஒப்புக்கொண்டார்.

பழிக்குப்பழி

கொலை செய்யப்பட்டவர் தனக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும் அதனால் கூர்மையான கருவிகொண்டு தாக்கியதாகவும் அந்த டிரைவர் போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய அல் குசைஸ் காவல்நிலைய இயக்குனர் பிரிகேடியர் அப்துல் ஹலீம் அல் ஹாஷிமி,” மிகக் குறுகிய காலத்தில் இந்த வழக்கு முடிக்கப்பட்டிருப்பது சமூகத்தில் நிலவும் பாதுகாப்புத் தன்மையை சுட்டிக்காட்டுகிறது. இந்த வழக்கை விரைவாக முடித்த துபாய் காவல்துறையின் குற்றவியல் பிரிவு அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்” என்றார்.

dubai police
0 Shares
Share via
Copy link