UAE Tamil Web

20 வயது இளைஞரின் ஆண்மையைப் பறித்த விபத்து : நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு..!

court

அபுதாபி சிவில் நீதிமன்றத்தில் படகு விபத்தினால் காயமடைந்த இளைஞர் தொடுத்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் படகின் கேப்டன் மற்றும் அவரது காப்பீட்டு நிறுவனம் இணைந்து 10 லட்சம் திர்ஹம்ஸ் தொகையை இளைஞருக்கு இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

- Advertisment -

நிரந்தர ஊனம்

அபுதாபியின் கடற்கரை ஒன்றில் ஜெட் ஸ்கை எனப்படும் கடலில் ஓட்டும் வாகனத்தை 20 வயது இளைஞர் இயக்கிக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது கடற்கரையில் அதிவேகத்தில் பயணித்த படகு இளைஞரின் ஜெட் ஸ்கையில் மோதியிருக்கிறது. இதனால் படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடலின் பல்வேறு பாகங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. முக்கியமாக இடுப்பில் அந்தரங்க எலும்பு முறிந்து போனதால் இளைஞர் நிரந்தரமாக தனது ஆண்மையை இழந்திருப்பதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவரது இடதுகாலில் ஏற்பட்ட முறிவின் காரணமாக, வேறு வழியில்லாமல் முழங்காலுக்குக் கீழ் பகுதி வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.

இளைஞரின் தொடையில் உலோக பட்டை பொருத்தப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கவனக்குறைவு

முன்னர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், படகின் கேப்டன் அதிவேகமாகவும், அலட்சியமாகவும் படகை இயக்கியதே இந்த விபத்திற்குக் காரணம் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றவாளிக்கு 2 மாத சிறைத்தண்டனையும் 5000 திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டது.

இழப்பீடு

இதனையடுத்து, சிவில் நீதிமன்றத்தை நாடிய இளைஞர் விபத்து நிகழ காரணமாக இருந்த கேப்டன் மற்றும் அவரது காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து 10 மில்லியன் திர்ஹம்ஸ் இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கில் இளைஞருக்கு ஏற்பட்ட உடல் மற்றும் மன ரீதியான சேதங்களுக்கு இழப்பீடாக 1 மில்லியன் திர்ஹம்ஸ் தொகையை படகின் கேப்டன் மற்றும் அவரது காப்பீட்டு நிறுவனம் இளைஞருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சட்ட செலவுகளையும் அவர்களே ஏற்பகும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.