UAE Tamil Web

குடி போதையில் காரணமின்றி இரும்பு ராடுகளால் இளைஞரை கொடூரமாக தாக்கிய இரு பாகிஸ்தானியர்கள்.! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன.?

court

துபாயைச் சேர்ந்த பாகிஸ்தான் வெளிநாட்டவர்கள் இருவர், மது போதையில் தங்களது நாட்டுக்காரரை தாக்கிய குற்றத்திற்காக தண்டனை பெற்றுள்ளனர்.

- Advertisment -

முதல் நிகழ்வு துபாய் நீதிமன்ற பதிவுகளின் படி, இரு பிரதிவாதிகள் உட்பட 20 குடிகாரர்கள் அடங்கிய குழுவினர், பாதிக்கப்பட்ட 25 வயதுடைய பாகிஸ்தானியரை உடல் ரீதியாக தாக்கி 6% நிரந்தர இயலாமையை ஏற்படுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபரில் துபாயின் அல் ரெஃபா பகுதியில் நடந்த சம்பவம் குறித்து துபாய் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்டவர் அளித்த சாட்சியம் பின்வருமாறு, ‘ எனது குடியிருப்பிற்கு வெளியே ஒரு நண்பருடன் பேசி கொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த 20 பேர் கொண்ட குழு என்னை இரும்புக் கம்பிகளால் சரமாரியாக தாக்கியது.

குடிகார கும்பலில் இருந்த சிலர் என்னைப் பிடித்து கொள்ள மற்றவர்கள் என்னை அடித்தார்கள். அவர்கள் ஏன் என்னைத் தாக்கினார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. தாக்குதலில் என் ஒரு விரல் உடைந்தது, என் நெற்றி மற்றும் இடது தோளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன’ என்று சம்பவம் பற்றி கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் சந்தேக நபர்களை கொண்டு அடையாள அணிவகுப்பு நடத்திய போது 21 மற்றும் 25 வயதுடைய இரண்டு பாகிஸ்தான் பிரதிவாதிகளை பாதிக்கப்பட்டவர் அடையாளம் காட்டினார். தாக்குதல் நடத்திய போது தாங்கள் மது அருந்தியிருந்ததாக இரு பிரதிவாதிகளும் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் பாதிக்கப்பட்டவரை கடுமையாக தாக்கியுள்ளதும் உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து பிரதிவாதிகளில் ஒருவருக்கு இரண்டாண்டு சிறை தண்டனையும், மற்றொருவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறைவாசம் அனுபவித்த பின்னர் பிரதிவாதிகள் நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.