UAE Tamil Web

பேஸ்புக் வழியாகக் கிடைத்த ரொமாண்டிக் மெசேஜ் : சபலத்தால் சிக்கிய நபருக்கு நிகழ்ந்த பரிதாபம்..!

dubai-court

பேஸ்புக் மூலமாக ஆணைக் கவர்ந்து அவரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடித்து, தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களுக்கு 3 ஆண்டுகள் தண்டனையும் 20,500 திர்ஹம்ஸ் அபராதமும் விதித்திருக்கிறது துபாய் நீதிமன்றம்.

பேஸ்புக் .. மசாஜ்..

பேஸ்புக்கில் மசாஜ் செய்வதாக வந்த விளம்பரத்தை நம்பி, அதில் குறிப்பிட்டிருந்த எண்ணை அழைத்திருக்கிறார் மசாஜ் விரும்பி ஒருவர். ஐரோப்பிய பெண் ஒருவரின் புகைப்படத்துடன் இருந்த பேஸ்புக் கணக்கை நம்பி, அல் பார்ஷாவில் உள்ள பிளாட்டிற்குச் சென்றிருக்கிறார்.

ஆனால், அங்கே மேலும் மூன்று பேர் இருந்திருக்கிறார்கள். மசாஜ் செய்துகொள்ள வந்தவரை மாங்கு மாங்கென்று அடித்துத் துவைத்து அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த 20,500 திர்ஹம்ஸ் பணத்தை பெண்கள் சுருட்டியுள்ளனர்.

மேலும், தகாத முறையில் புகைப்படங்கள் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் எனவும் மிரட்டியிருக்கின்றனர்.

பணத்தையும் தொலைத்து, புகைப்படத்திற்கு போஸும் கொடுத்த பிறகு, பாதிக்கப்பட்டவர் நேரடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரை விசாரித்த காவல்துறை இப்பெண்களை உடனடியாக சுற்றி வளைத்திருக்கிறது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பேஸ்புக் மூலமாக அவரை கவர்ந்து அவரைத் தாக்கி பணம் பறித்ததாக பெண்கள் ஒப்புக்கொண்டனர். பணத்தினை சுருட்டும் நோக்கத்தோடு அவரை கடுமையாக தாக்கியதாக பெண்கள் தெரிவித்திருக்கின்றனர்.

dubai-court
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap