UAE Tamil Web

அமீரகம்: இந்தியாவைச் சேர்ந்த ஆயுள் தண்டனைக் கைதியின் கருணை மனுவை நிராகரித்த நீதிமன்றம்..!

dubai-court

இந்தியாவைச் சேர்ந்த 40 வயது நபர் கடந்த 2003 ஆம் ஆண்டு இரண்டு பாகிஸ்தான் நபர்களுடன் சேர்ந்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். துபாயின் நைஃப் பகுதியில் 22 வயது இளைஞரை தாக்கியதோடு, அவரிடமிருந்து பொருட்கள், மொபைல் போன் ஆகியவற்றை இந்த மூன்று பேர் கொண்ட கும்பல் திருடியிருக்கிறது.

அதோடுமட்டுமல்லாமல் இளைஞரின் மார்பு, கழுத்து மற்றும் கைகளில் கத்தியால் குத்தியிருக்கின்றனர். கடுமையாக தாக்கப்பட்ட இந்தியரிடமிருந்து 300 திர்ஹம்ஸ் பணம், அவரது ATM கார்டு, செல்போன் ஆகிவற்றை இந்த கும்பல் எடுத்துச் சென்றிருக்கிறது.

அந்த ATM கார்டை வைத்து 5,500 திர்ஹம்ஸ் பணத்தை எடுத்தபோது, அங்கிருந்த கேமராவைக் கொண்டு குற்றவாளிகளை காவல்துறை கைது செய்திருக்கிறது.

வழக்கை விசாரித்த துபாய் நீதிமன்றம் இந்தியருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த நபருக்கும் ஆயுள்தண்டனை விதித்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் சொந்த ஊருக்குத் தப்பிச் சென்றுவிட்டார். அவர் 2016 ஆம் ஆண்டு மீண்டும் துபாய் வர முயற்சித்த போது, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

துபாய் மத்திய சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்துவரும் இந்தியர் முன்கூட்டியே விடுதலை கோரி விண்ணப்பித்திருந்தார். இருப்பினும் அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அமீரக சட்டப்படி, 15 ஆண்டுகள் ஆயுள்தண்டனை அனுபவித்தவர்கள் முன்கூட்டியே விடுதலை கோரி விண்ணப்பிக்கலாம். ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்படுமானால், இரண்டு வருடம் கழித்தே மீண்டும் விண்ணப்பிக்க முடியும்.

தண்டனையை அனுபவித்துவரும் இந்தியர், கடந்த 2017 ஆம் ஆண்டில் ஒருமுறை முன்கூட்டிய விடுதலைக்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால் அப்போதும் நீதிமன்றம் அதனை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

dubai-court
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap