UAE Tamil Web

திருடிய உடைகளுடன் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட பணிப்பெண்ணிற்கு நிகழ்ந்த சோகம்..!

dubai-court

வீட்டு உரிமையாளரின் உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட பணிப்பெண் மீதான வழக்கு துபாய் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

காணாமல்போன உடைகள்

வீட்டு உரிமையாளர் தனது இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனில் மூழ்கியிருந்த வேளையில் தனது வீட்டில் பணிபுரியும் 26 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணுடைய புகைப்படங்களைப் பார்த்திருக்கிறார். அந்தப் பெண் அணிந்திருக்கும் உடைகளை எங்கேயோ பார்த்ததுபோல் இருக்க, தனது மனைவியிடன் அந்தப் புகைப்படங்களைக் காட்டியிருக்கிறார் அவர்.

பார்த்த மறுவினாடியே அவை தன்னுடைய உடைகள் என வீட்டு உரிமையாளர் முடிவிற்கு வந்தார். உடனடியாக பணிப்பெண்ணின் அறைக்குச் சென்ற இருவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. உடைகள் மட்டுமல்லாமல் ஹேண்ட் பேக்குகள், லிப்ஸ்டிக் போன்ற பொருட்களையும் பணிப்பெண் திருடி வைத்திருந்தது தம்பதியினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு 500 திர்ஹம்ஸ் என வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

தம்பதி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை பணிப்பெண்ணை கைது செய்தது. காவல்துறை விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அப்பெண்ணிற்கு 3 மாத சிறைவாசமும் 500 திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் தண்டனைக் காலம் முடிவடைந்தபிறகு அப்பெண் நாடுகடத்தப்படவேண்டும் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

dubai-court
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap