UAE Tamil Web

துபாய்: குத்தி கொலை செய்து விடுவதாக கத்தியை காட்டி ஸ்பான்சரை கதிகலங்க வைத்த பணிப்பெண்.! என்ன காரணம், தண்டனை கிடைத்ததா.?

court

துபாயில் தனது ஸ்பான்சரை கத்தியால் குத்தி கொலை செய்யப் போவதாக மிரட்டிய வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு, நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

- Advertisment -

முதல் நிகழ்வு துபாய் நீதிமன்ற அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரை சேர்ந்த 27 வயதான துபாய் பணிப்பெண்ணின் மொபைலை சந்தேகத்தின் பேரில் சோதிக்க, அவரது ஸ்பான்சரான 48 வயதான எமிராட்டி பெண் மறைத்து வைக்கப்பட்டிருந்த போனை எடுத்துள்ளார்.

ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பணிப்பெண் மொபைலை தன்னிடம் கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக ஸ்பான்சரையே மிரட்டியுள்ளார். வழக்கு விவரம் பின்வருமாறு: கடந்த ஆகஸ்ட் மாதம் துபாய் போலீசாருக்கு அல் பர்ஷாவில் உள்ள ஒரு வில்லாவிலிருந்து அவசர அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் 15 மாதங்களாக தங்கள் வீட்டில் வேலை பார்த்து வரும் பணிப்பெண்ணுக்கு, நான் வாங்கி கொடுத்த மொபைலை தேடினேன்.

அப்போது அந்த மொபைலானது அவளது துணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்து எடுத்தேன். சமையலறைக்கு சென்று கத்தி எடுத்து வந்த அவள், மொபைலை தன்னிடம் தராவிட்டால் என்னையும் கொன்று விட்டு, தன்னை தானே குத்தி கொண்டு சாகப்போவதாக மிரட்டினாள் என்று எமிராட்டி பெண் அதிகாரிகளிடம் புகார் கூறினார்.

குறிப்பிட்ட பணிப்பெண் என் குழந்தைகளின் செயல்பாடுகளை பதிவுசெய்ததையும், எனக்குத் தெரியாமல் வீட்டின் வீடியோக்களை எடுத்து, அவற்றை வாட்ஸ்அப் வழியாக மற்றவர்களுக்கு அனுப்புவதையும் தாம் பார்த்ததாகவும், அதை உறுதி செய்யவே அந்த மொபைலை தேடி எடுத்ததாகவும் ஸ்பான்சர் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற துபாய் போலீஸார் பணிப்பெண்ணை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்நியர்களுடன் ஸ்பான்சரின் வீட்டிற்குள் படங்கள் எடுத்ததையும், ஸ்பான்சர் குடும்ப உறுப்பினர்களின் கிளிப்புகளைப் பதிவு செய்ததாகவும், மொபைலை கைப்பற்றிய காரணத்திற்காக ஸ்பான்சரை கொலை செய்வதாக அச்சுறுத்தியதாகவும ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து பிரதிவாதி மீது மிரட்டல் விடுத்தது, அந்நியர்களை ஸ்பான்சர் வீட்டிற்குள் அனுமதித்தது மற்றும் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி ஸ்பான்சர் குடும்பத்தின் தனியுரிமையை மீறியது மற்றும் கிளிப்புகள் மற்றும் படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டது, கொலை மிரட்டல் என அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை துபாய் பப்ளிக் பிராசிகியூஷன் நீதிமன்றத்தில் முன்வைத்தது.

வழக்கை விசாரித்த முதல் நிகழ்வு நீதிமன்றம் பணிப்பெண்ணிற்கு 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. மேலும் சிறை தண்டனையை அனுபவித்த பின்னர் அப்பெண்ணை நாடு கடத்தவும் ஆணையிட்டுள்ளது.