UAE Tamil Web

லிஃப்டிற்குள் சிறுமியின் அந்தரங்க இடங்களைத் தொட்ட இந்தியர் – தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம்..!

teenager sexual abusement

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்தியருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதித்திருக்கிறது துபாய் நீதிமன்றம்.

கொமொரோஸ் ஐஸ்லேண்ட்டைச் சேர்ந்த மாணவி புர் துபாயில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் லிப்டில் பயணித்திருக்கிறார். அப்போது மாணவியின் இரண்டு சகோதரிகளும் லிப்டிற்குள் இருந்திருக்கிறார்கள். லிப்டை விட்டு வெளியேறும் வேளையில் 35 வயதான இந்தியர் மாணவியின் பின்புறத்தில் கை வைத்திருக்கிறார்.

பதறிப்போன மாணவி உடனடியாக தனது தந்தையிடம் சென்று நடந்ததைத் தெரிவித்திருக்கிறார். “லிப்டை விட்டு வெளியே வரும்போது அவளுடைய பின்புறத்தை அவன் தொட்டிருக்கிறான். இதனையடுத்து எனது மகள் என்னிடம் நடந்தவற்றைக் கூறினார்” என மாணவியின் தந்தை தெரிவித்தார்.

இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவர் மீது துபாய் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3 மாத சிறைத் தண்டனையும், தண்டனைக்காலம் முடிவடைந்தவுடன் அவர் நாடுகடத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

teenager sexual abusement
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap