UAE Tamil Web

வேலை செய்த நிறுவனத்திலிருந்து பேருந்தைத் திருடி விற்ற டிரைவர் – துபாயில் பரபரப்பு..!

bus

துபாயில் தனியார் போக்குவரத்து நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர், அதே நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்தை திருடி விற்ற வழக்கு இன்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையில் தான் திருடிய பேருந்தை 13,000 திர்ஹம்ஸ் பணத்திற்கு விற்றதாக குற்றவாளி ஒப்புக்கொண்டார்.

துபாய் பொது வழக்குத்துறையின் அறிக்கையின்படி, பணியாளர்களை அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து கம்பெனிக்கு அழைத்துச்செல்லும் பணியினை குற்றம் சுமத்தப்பட்டவர் மேற்கொண்டு வந்திருக்கிறார். பின்னர் அவருக்கு சூப்பர்வைசராக பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

பேருந்தின் கள்ள சாவி ஒன்றினை குற்றம் சுமத்தப்பட்டவர் வைத்திருந்திருக்கிறார். வார இறுதி நாட்களில் பேருந்து நிற்கும் இடத்தில் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதை அறிந்து இந்த திருட்டு வேளையில் அவர் இறங்கியிருப்பது நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.

வழக்கம்போல, அடுத்தநாள் பேருந்து ஓட்டுனர் வேலைக்குச் செல்கையில் பேருந்தைக் காணவில்லை என குற்றவாளியிடமே தெரிவிக்க, அந்த உத்தமரும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த பின்னர், குற்றவாளியை காவல்துறை கைது செய்திருக்கிறது.

bus
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap