UAE Tamil Web

சாலையில் போலி பணத்தை வாரி இறைத்த வள்ளல் – இமாலய தொகையை அபராதமாக விதித்த நீதிமன்றம்..!

fake currency (2)

அமீரகத்தில் வசித்துவரும் ஐரோப்பாவைச் சேர்ந்த வள்ளல் ஒருவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அல் கூஸ் இண்டஸ்ட்ரியல் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த அந்த நபர், காரை நிறுத்தி சாலையில் போலி யூரோக்களை கட்டுக்கட்டாக வீசுகிறார்.

- Advertisment -

இதனைப் பார்த்த அங்கிருந்த தொழிலாளர்கள் அதனை எடுக்க முயற்சிக்கையில் தள்ளுமுள்ளு நடக்கிறது. தன்னை பணக்காரராக காட்டிக்கொள்ள இவர் செய்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலானது. அதனை துபாய் காவல்துறை அதிகாரிகள் பார்க்கும் வரைக்கும் போலி வள்ளல் குஷியில் இருந்திருக்கிறார்.

உடனடியாக துபாய் காவல்துறை மேற்கண்ட நபரைக் கைது செய்தது. இன்ஸ்டாகிராமில் லைக்குகள் பெற இப்படி செய்ததாக ஆசாமி ஒப்புக்கொண்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிக்கு 200,000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் ஜெயில் தண்டனை விதித்தது.

மேலும் தன்னிடம் 740,000 போலி அமெரிக்க டாலர்கள் இருப்பதாகவும், யூரோக்கள் அனைத்தும் ஆசியாவைச் சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து 1,000 திர்ஹம்ஸ்க்கு வாங்கியதாக குற்றவாளி ஒப்புக்கொண்டார்.

போலி பணங்களை அச்சடித்து விற்பனை செய்துவந்த உத்தமரை, துபாய் காவல்துறை கையும் களவுமாக கைது செய்திருக்கிறது.