UAE Tamil Web

5 ஆண்டுகளில் 8.9 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள கள்ள பொருட்களை பறிமுதல் செய்த துபாய் போலீஸ்..

fake

கடந்த 5 ஆண்டுகளில் 8.9 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள போலி பொருட்களை துபாய் போலீஸ் பறிமுதல் செய்துள்ளது.

- Advertisment -

இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள் துபாய் போலீஸின் பொருளாதார எதிர்ப்பு குற்றவியல் துறை, கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,430 சந்தேக நபர்களை கைது செய்து 2,145 பொருளாதார குற்ற வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும், 8.966 பில்லியன் திர்ஹம்ஸிற்கும் அதிகமான மதிப்புள்ள போலி பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக பேசிய பொருளாதார குற்றத் தடுப்புத் துறை இயக்குநர் சலாஹ் பாசிபா, பதிவு செய்யப்பட்டுள்ள 2,145 வழக்குகளில் வணிக மோசடி, கள்ளநோட்டு, பண பெருக்கம், மோசடி உள்ளிட்டவை அடக்கம்.2020-ம் ஆண்டு தங்கள் துறையில் உள்ள கள்ள பொருட்கள் தடுப்பு பிரிவு, மோசடி தடுப்பு பிரிவு மற்றும் வணிக மோசடி மற்றும் திருட்டு பிரிவு ஆகியவை 246 வழக்குகளை பதிவு செய்துள்ளன.

இவ்வழக்குகளில் 307 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், 2.55 பில்லியன் திர்ஹம்ஸிற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார். 3 பிரிவுகள் முறையே கள்ள பொருட்கள் தடுப்பு பிரிவு 23 வழக்குகளை பதிவு செய்து 37 குற்றவாளிகளையயும், மோசடி தடுப்பு பிரிவு 68 வழக்குகளை பதிவு செய்து105 குற்றவாளிகளையும், வணிக மோசடி மற்றும் திருட்டு பிரிவு155 வழக்குகளை பதிவு செய்து 165 குற்றவாளிகளையும் கைது செய்துள்ளது என்ற விரிவான தகவல்களை அதிகாரி சலாஹ் பகிர்ந்து கொண்டார்.

துபாய் காவல் துறையில் வர்த்தக குற்றவியல் புலனாய்வுத் துறையின் இயக்குனராக உள்ள பிரிகேடியர் ஜமால் சலீம் அல் ஜலாஃப் கூறுகையில், டிரேடீ மார்க் கூட்டாளர்களுடன் ஒருங்கிணைந்து துல்லியமான ஒரு செயல் திட்டத்தின் மூலம் பொருளாதார குற்றங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய துபாய் காவல்துறை ஆர்வமாக உள்ளது.

கள்ளப் பொருட்களைக் கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் கருவிகளை ஆராய்வதற்காக பிராண்டுகளின் பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார எதிர்ப்பு குற்றத் துறை அதிகாரிகளுக்கு இடையே வழக்கமான மீட்டிங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொருளாதார குற்றங்களை எதிர்ப்பதில் துபாய் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பல்வேறு சர்வதேச பிராண்டுகளின் நம்பிக்கையை பெற்றுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.