UAE Tamil Web

துபாய்: வேகம் மற்றும் சப்தத்திற்காக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 1097 வாகனங்களைத் தூக்கிய காவல்துறை..!

Dubai Police

விதிமுறைகளை மீறி மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 1097 கார்களை துபாய் காவல்துறை கைப்பற்றியுள்ளதாக துபாய் ஊடக அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

- Advertisment -

இதுகுறித்து துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்,” பவர் பூஸ்டரைப் பயன்படுத்தி வாகனத்தின் வேகம் மற்றும் சப்தத்தினை அதிகரித்து குடியிருப்பாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 1097 வாகனங்களை துபாய் காவல்துறை கைப்பற்றியுள்ளது. புதிய போக்குவரத்து திட்டத்தின்படி பிப்ரவரி 11 – மார்ச் 17 ஆம் தேதிவரையில் நடத்தப்பட்ட திட்டத்தின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.