UAE Tamil Web

சிலிண்டரை வெடிக்கவைத்து வீட்டை எரிப்பதாக மனைவி மற்றும் குழந்தைகளை மிரட்டிய நபர் – காவல்துறையின் சாதுர்யத்தால் நிகழ்ந்த திருப்பம்..!

uae,-police,-dubai,-sharjah,-covid-19,-violations

சிலிண்டரை வெடிக்க வைத்து, தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டிய நபரிடம் இருந்து அவரது மனைவி, 3 குழந்தைகள் மற்றும் பணிப்பெண்ணை துபாய் காவல்துறை மீட்டிருக்கிறது.

- Advertisment -

மன நலம் பாதிக்கப்பட்டவரான அந்த நபர் சமையல் சிலிண்டரை வெடிக்க வைப்பதாக மிரட்டிய உடனே, என்னசெய்வதன்று தெரியாமல் திகைத்த பணிப்பெண், வேலையில் இருந்த அவரது மனைவிக்கு போன் செய்திருக்கிறார். மூன்று குழந்தைகளையும் அருகில் உள்ள வீட்டினரிடம் சேர்க்குமாறு மனைவி அறிவுறுத்த, பணிப்பெண்ணும் அவ்வாறே செய்திருக்கிறார்.

மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் அல் ரஷீதியா காவல்நிலையத்தின் இயக்குனர் பிரிகேடியர் சயீத் பின் சுலைமான் தலைமையிலான குழு வில்லாவிற்கு விரைந்தது. சிலிண்டரை திறந்து, கையில் லைட்டருடன் நின்று கொண்டிருந்த அந்த நபரிடம் காவல்துறையினர் சாதுர்யமாக பேச்சுவார்த்தை நடத்தி அவரிடமிருந்து சிலிண்டரைக் கைப்பற்றினர்.

தனது கணவர் கடுமையான மன நோயினால் பாதிக்கப்பட்டவர் என்றும், இதற்கு முன்னர் இதற்கென சிகிச்சை மேற்கொண்டுவந்ததாகவும் அவரது மனைவி தெரிவித்தார். காவல்துறையின் சாதுர்யமான நடவடிக்கையால் தற்போது அவரது மனைவியும் குழந்தைகளும் பத்திரமாக உள்ளனர்.