UAE Tamil Web

27 கார்களை அதிரடியாக பறிமுதல் செய்த துபாய் போலீஸ்.. போக்குவரத்து சட்டங்களை மீறி அப்படி என்ன செய்தார்கள்.?

car

போக்குவரத்து சட்டங்களை மீறிய 27 கார்களை துபாய் காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இயல்பை மீறி அந்த வாகனங்களில் சட்டவிரோதமாக பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதே இந்த நடவடிக்கைக்கு காரணம்.

- Advertisment -

இதுபற்றி தகவல் தெரிவித்துள்ள துபாய் காவல்துறை என்ஜின் வேகத்தை அதிகரிக்க பவர் பூஸ்டர்களைக் கொண்டு மாற்றியமைக்கப்பட்ட கார்கள் தொல்லைகளை தருகின்றன மற்றும் ஓட்டுநர்கள் மற்றும் பிற சாலை பயனர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றன என கூறியுள்ளது.

அல் பார்ஷா காவல் நிலைய இயக்குநர் பிரிகேடியர் அப்துல் ரஹீம் பின் ஷாஃபியா இது பற்றி கூறும் போது, ‘ பெரியளவில் மாற்றம் செய்யப்பட்ட கார்களை ஓட்டும் போது குறிப்பாக வாகனம் அல்லது சாலைகளின் வகைக்கு பொருந்தாத வகையில் இயந்திர மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பின் ஓட்டுநர்கள் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். மேலும் அத்தகைய கார்களால் ஏற்படும் விபத்துகள் மிகவும் ஆபத்தானவை மற்றும் அப்பாவி மக்கள் மற்றும் பிற சாலை பயனர்களின் உயிருக்கு பெரிதும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்’என்றார்.

engine

அங்கீகாரமின்றி வாகனத்தின் இயந்திரத்தில் மாற்றங்கள் செய்வது அல்லது வாகனத்தின் பேஸில் மாற்றங்கள் செய்வது என்பது 30 நாட்கள் வாகன சிறைபிடிப்பு கூடுதலாக, 1,000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் 12 கருப்பு புள்ளிகளுக்கு உட்பட்டவை என்பதை நினைவுபடுத்தியுள்ளார்.

வழக்கைப் பொறுத்து அபராதம் அதிகரிக்கலாம் என்ற அவர், இந்த அபராதங்கள் அவசியம். ஏனென்றால் பலரைக் கொல்ல அல்லது மற்ற வாகனங்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்த ஒரே ஒரு டிரைவர் போதும் எனறார். மாற்றியமைக்கப்பட்ட கார்கள் ஓட்டுநருக்கு தவறான கட்டுப்பாட்டைக் கொடுக்கும்

எனவே தங்கள் வாகனத்திற்கு சாலைகளில் செல்லும் மற்ற வாகனங்களை முந்திச்செல்ல போதுமான சக்தியும், வேகமும் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அதுவே ஆபத்தில் முடிந்து விடும் என்று அதிகாரி அப்துல் ரஹீம் அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்.

அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய கார் ஒன்று 400 கி.மீ வேகத்தில் செல்வதை கற்பனை செய்வது கடினம். இத்தகைய மாற்றங்கள் கடுமையான மற்றும் ஆபத்தான விபத்துகளை நிச்சயம் ஏற்படுத்தும். சாலை பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பாகும் என்று அவர் வலியுறுத்தினார்.