UAE Tamil Web

துபாயில் பயங்கரம்: கத்திகள்,வாள்களை கொண்டு நடந்த தெரு சண்டை.! துண்டிக்கப்பட்ட இளைஞரின் கையை மீட்ட போலீஸ்..

dubai

துபாய் போலீஸார் ஒரு தெருவில் இருந்து துண்டிக்கப்பட்ட கையை மீட்டனர். இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

- Advertisment -

மிர்டிஃப் பகுதியில் நள்ளிரவில் இளைஞர்கள் அடங்கிய இரு குழுக்கள் இடையே பயங்கர மோதல் வெடித்துள்ளது. கத்திகள் மற்றும் வாள்கள் போன்ற ஆயுதங்களை கொண்டு இரு தரப்பினரும் பயங்கரமாக தாக்கி கொண்டுள்ளனர். இதில் சண்டையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டது.

தெரு சண்டையில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 8 இளைஞர்களை கண்டுபிடித்து போலீஸார் கைது செய்யதுள்ளனர். வன்முறை செய்த இளைஞர்களை ஒரு மணி நேரத்திற்குள் தேடுதல் குழுக்கள் கைது செய்துள்ளனர்.

துபாய் காவல்துறையில் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநராக உள்ள பிரிகேடியர் ஜெனரல் ஜமால் சலீம் அல் ஜலஃப் இது தொடர்பாக கூறுகையில், எங்களது செயல்பாட்டு அறைக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. அதில் 2 இளைஞர்களின் குழுக்களுக்கு இடையே பயங்கர தெரு சண்டை நடப்பதாக புகாரளிக்கப்பட்டது.

இதனை அடுத்து போலீசார் ஆம்புலன்சுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் அங்கு சென்ற நேரத்தில், இளைஞர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். இருப்பினும், சண்டை நடந்த தெருவில் இருந்து துண்டிக்கப்பட்ட கை ஒன்று மீட்கப்பட்டது. சில நிமிடங்களில் சண்டையில் கையை இழந்த இளைஞனை கண்டுபிடித்த போலீஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் வன்முறையில் ஈடுபட்ட 8 இளைஞர்களை ஒரு மணி நேரத்திலேயே அதிகாரிகள் கைது செய்தனர்.சண்டையில் பயன்படுத்தப்பட்ட சில ஆயுதங்களை இளைஞர்களின் கார்களில் இருந்து அதிகாரிகள் மீட்டதாக ஜமால் சலீம் கூறினார்.