UAE Tamil Web

சொகுசுக் கப்பலில் கும்மாளம்: சுற்றிவளைத்த காவல்துறை – வைரலாகும் வீடியோ..!

police dubai

துபாயில் சொகுசுப் படகு ஒன்றில் கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை மீறி நடந்த நிகழ்ச்சியை துபாய் போலீசார் தடுத்து நிறுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

துபாய் சுற்றுலாத்துறையின் உதவியுடன் துபாய் காவல்துறை சொகுசுப் படகில் நடைபெற்ற கேளிக்கை விருந்தினை தடுத்து நிறுத்தியதாக துபாய் ஊடக அலுவலகம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த படகில் இருந்த எவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொகுசுப் படகின் உரிமையாளருக்கு ஒரு மாத காலம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இவ்விருந்தில் கலந்துகொண்டவர்களுக்கு 50,000 திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

police dubai
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap