UAE Tamil Web

திருடிய இடத்தில் விட்டுச்சென்ற சைக்கிளை எடுப்பதற்காக திரும்பிவந்த திருடனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Crime

துபாயில் திருடிய பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய திருடன், தான் விட்டுச்சென்ற சைக்கிளை எடுக்கவந்த போது கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisment -

என்ன நடந்தது?

அல் ஹோர் அன்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில், வசித்துவருபவர் அன்று மாலை வழக்கம்போல தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது மூன்றுபேர் கொண்ட கும்பல் கத்தியை அவரது கழுத்தில் வைத்து, இருப்பதையெல்லாம் கொடுக்கும்படி மிரட்டியிருக்கிறது.

வேறு வழியில்லாமல் தனது பர்சில் இருந்த 970 திர்ஹம்ஸ் பணம் மற்றும் ஐபோனை பாதிக்கப்பட்டவர் கொடுக்க, கும்பல் அதனைப் பறித்துக்கொண்டு ஓடியிருக்கிறது. இதனையடுத்து தனது அண்டை வீட்டாரிடம் நடந்ததை பாதிக்கப்பட்டவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வழிப்பறியில் ஈடுபட்ட மூவரில் ஒரு திருடன் மீண்டும் வருவதை அவர் பார்த்திருக்கிறார்.

உடனடியாக, அருகில் இருப்பவர்களை அழைக்க 22 வயதான நைஜீரியாவைச் சேர்ந்த திருடனை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்தனர். மேலும், அவரை காவல்துறையிடம் அவர்கள் ஒப்படைத்திருக்கின்றனர்.

காவல்துறையிடம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞர், சம்பவ இடத்தில் விட்டுச்சென்ற சைக்கிளை மீண்டும் எடுக்க வந்ததாகத் தெரிவித்திருக்கிறார்.