UAE Tamil Web

14 வயது சிறுமியிடம் காதலிப்பதாகக் கூறி அத்துமீறிய 50 வயது ஆசிரியர் – மிகக் கடுமையான தண்டனை விதிக்குமாறு பொது வழக்குத்துறை வலியுறுத்தல்..!

dubai-court

அமீரகத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட 50 வயது ஆசிரியர் மீதான வழக்கு நேற்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

- Advertisment -

தனியார் நிறுவனமொன்றில் டியூஷனுக்காக விண்ணப்பித்திருந்த மாணவிக்கு இயற்பியல் ஆசிரியராக இருந்த எகிப்தைச் சேர்ந்த நபர் பாலியல் துன்புறுத்தல் அளித்திருக்கிறார்.

பொதுவழக்குத் துறையிடம் பேசிய பாதிக்கப்பட்ட மாணவி,” அவர் எனது கைகளை பிடித்துக்கொண்ட விதம் என்னை அச்சமூட்டியது. என்னை அவர் காதலிப்பதாகவும் அவருக்கு அருகில் என்னை அமரும்படியும் கூறினார். எனது கைகள் மற்றும் தொடையில் கைவைத்தார்” எனத் தெரிவித்தார்.

தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவிக்க, பெற்றோர் துபாய் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கின்றனர். ஆசிரியருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என பொதுவழக்குத்துறை நீதிமன்றத்தில் வலியுறுத்தியிருக்கிறது.

இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் எனவும் அதுவரையில் காவல்துறை கண்காணிப்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியர் இருப்பார் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.