UAE Tamil Web

துபாய்: காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்து வாங்கிக்கட்டிக்கொண்ட பெண்..!

dubai-court

போக்குவரத்திற்கு எதிர்த் திசையில் இ-ஸ்கூட்டரை இயக்கிய பெண்ணிடம் இருந்து ஸ்கூட்டரை பறிமுதல் செய்யும் வேளையில் தகராறில் ஈடுபட்ட பெண்ணிற்கு 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

என்ன நடந்தது?

எகிப்தைச் சேர்ந்த 34 வயது பெண் அல் நஹ்தா பகுதியில் தனது இ-ஸ்கூட்டரில் பயணித்துள்ளார். ஆனால் போக்குவரத்திற்கு எதிர்திசையில். இதனைக்கண்ட காவல்துறையினர் பெண்ணை தடுத்து நிறுத்தி அவரது அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டிருக்கிறார்கள்.

காவல்துறையினர் வாகனத்தைப் பறிமுதல் செய்ய முற்படுகையில், காவல்துறையின் வாகனத்தின் முன்னால் படுத்துக்கொண்டு இடையூறு செய்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் காவல்துறையினரை கண்டபடி திட்டவும் செய்திருக்கிறார்.

இதனையடுத்து மகளிர் காவல்துறை அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து, பெண்ணை கைது செய்து அல் குசைஸ் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அதன்பின்னர் நடந்த வழக்கு விசாரணையில் குற்றவாளியான பெண்ணிற்கு 3 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.