UAE Tamil Web

“ஏன் இப்படி வேர்க்குது உங்களுக்கு” – துபாய் விமான நிலையத்தில் மர்மப் பையுடன் சிக்கிய பெண்..!

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் கொகெய்ன் என்னும் போதை மருந்தை கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரிவில் பணிபுரிந்துவந்த 40 வயதான அவர் தனது ஹேண்ட் பேக்கில் கச்சிதமாக 1.5 கிலோ கொகெய்ன் போதைப்பொருளை வைத்து எடுத்துவந்திருக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெண் சுங்கத்துறை அதிகாரி ஒருவர் பரிசோதனைக்கு அழைக்கும்போது ஆப்பிரிக்கப் பெண்ணிற்கு வியர்த்துக்கொட்ட ஆரம்பித்திருக்கிறது.

ஏன் உங்களுக்கு இப்படி வியர்த்துக் கொட்டுகிறது? என சந்தேகத்துடன் கேட்ட அந்த அதிகாரி, பெண்ணின் உடமைகளை பரிசோதிக்கத் துவங்கியுள்ளார். அப்போதுதான் பைக்குள் பத்திரப்படுத்தப்பட்டிருந்த கொகெய்ன் எட்டிப் பார்த்திருக்கிறது.

உடனடியாக துபாய் காவல்துறைக்கும் போதை மருந்துத் தடுப்புப் பிரிவிற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் காவல்துறை அந்தப் பெண்ணை கைது செய்திருக்கிறது.

இந்த வழக்கில் சட்ட ரீதியிலான பணிகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap