UAE Tamil Web

துடைப்பத்தால் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட தொழிலாளர்கள்.! சண்டையில் சக ஊழியரின் வயிற்றை கத்தியால் பதம் பார்த்த இளைஞர்..

court

சண்டையின் போது தன்னுடன் வேலை பார்த்த சக ஊழியரை குத்தி கொல்ல முயன்ற தொழிலாளி ஒருவருக்கு முதல் நிகழ்வு துபாய் நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

- Advertisment -

29 வயதான பங்களாதேஷை சேர்ந்த தொழிலாளி கொலை முயற்சி குற்றச்சாட்டில் குற்றவாளி என நீதிமன்றம் கண்டறிந்து சிறை தண்டனை வழங்கியுள்ளது. நீதிமன்ற ஆவணங்களின்படி, சண்டையின் போது குற்றம்சாட்டப்பட்ட பிரதிவாதி, பாதிக்கப்பட்டவரை அவரது அடிவயிற்றில் குத்தினார். பின் ஆபத்தான நிலையில் கடுமையான காயங்களுடன் அவரை விட்டுச் சென்றார்.

பின்னர் குத்துப்பட்டவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஜனவரி 22-ம் தேதி அல் ரஷீதியா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. 40 வயதான பாகிஸ்தான் நபர் ஒருவர் விசாரணையின் போது கூறுகையில், “சம்பவ நாளில் இரண்டு பேரும் (குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர்) ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதை கண்டேன். குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதி ஒரு கட்டிடத்தின் படிக்கட்டுகளுக்கு அருகில் மறைந்திருந்தார். இதை பார்த்த பாதிக்கப்பட்டவர் அவருடன் பேச சென்றார். சில நொடிகளில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் அறைந்து கொண்டனர்.

சண்டையின் அடுத்தகட்டமாக இருவரும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் பங்களாதேஷ் தொழிலாளியின் தலையில் விளக்குமாத்தடி பலமாக பட்டதில், அவரது மூக்கிலிருந்து ரத்தம் வந்தது. இதனால் ஆவேசமுற்ற அவர் தன்னுடன் சண்டையிட்டவரை கத்தியால் குத்த முயன்றார். இதனை அடுத்து தொழிலாளர்கள் கூட்டம் உள்ளே நுழைந்து, அவரைக் கட்டுப்படுத்தவும் அவரது கையில் இருந்து கத்தியை பிடுங்கவும் முயன்றது.

நான் சண்டை நடந்த இடத்தை நெருங்கிய போது பிரதிவாதி மேற்பரப்பில் கத்தியை வைத்து அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டார். இன்னும் அருகில் சென்று பார்த்த போது பாதிக்கப்பட்டவருக்கு நிறைய இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர் என்னிடம் பிரதிவாதி தான் தன்னை கத்தியால் குத்தியதாக கூறினார் என்று தெரிவித்துள்ளார். தப்பியோட முயன்றவரை அருகிலிருந்த செக்யூரிட்டி கார்ட்ஸ் பிடித்து வைத்து போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீஸ் மற்றும் பொது வழக்கு விசாரணை இரண்டிலுமே பாதிக்கப்பட்டவரை அடிவயிற்றில் கத்தியால் குத்தியதாக பிரதிவாதி ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட பங்களாதேஷை சேர்ந்த தொழிலாளிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் சிறைவாசத்தின் முடிவில் அவரை நாடு கடத்தவும் உத்தரவிட்டது.

15 நாட்களுக்குள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பிரதிவாதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.