UAE Tamil Web

காதலிப்பதாகக் கூறி 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு தண்டனையை அறிவித்தது நீதிமன்றம்..!

Sexual-assault-Shutterstock

காதலிப்பதாக் கூறி 13 வயது சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட அமீரக வாழ் பாகிஸ்தான் இளைஞர் மீதான வழக்கில் இன்று துபாய் நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது. குற்றவாளிக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம் தண்டனைக்காலம் முடிவடைந்தவுடன் அவர் நாடுகடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறது.

- Advertisment -

தகாத உறவு..

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அந்த சிறுமியின் தந்தை (62) கடந்த டிசம்பரில் சிறுமி வீட்டிற்கு காலதாமதமாக வந்ததையும், அவளது லேப்டாப்பில் அதிக நேரம் செலவிட்டதையும் கவனித்திருக்கிறார்.

“இதுகுறித்து என் குழந்தையிடம் விசாரித்தபோது, அவள் ஒருவரை விரும்புவதாகவும், அவனோடு தவறான உறவில் ஈடுபட்டதாகவும் சொன்னாள்” என அவளது தந்தை குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து புர் துபாய் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் சிறுமியின் தந்தை.

இதனையடுத்து சிறுமியுடன் மூன்று முறை தகாத உறவில் ஈடுபட்ட 27 வயதான பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

அந்த சிறுமியை இன்ஸ்டாகிராம் மூலமாக அணுகியதாகவும், அவளது வீட்டு மாடியில் இருவரும் சந்தித்ததாகவும் பின்னர் ஆபாசப் படங்களை இருவரும் இணைந்து பார்த்ததாகவும் அந்தத் தொழிலாளி ஒப்புக்கொண்டார்.

சிறுமியின் வயது மற்றும் குடும்பத்தின் நிலைகுறித்து பிரதிவாதி கருத்தில்கொள்ளவில்லை என பொது வழக்குத்துறை தெரிவித்திருந்தது.

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரதிவாதிக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என பொது வழக்குத்துறை முறையிட்டது குறிப்பிடத்தக்கது.