UAE Tamil Web

குடித்துவிட்டு இலவசமாக உணவு வழங்கும்படி மிரட்டிய நபர் – துபாய் காவல்துறையினர் அளித்த “விருந்து”..!

crime

கடந்த செப்டம்பர் மாதம் இலவசமாக உணவு வழங்கவில்லை எனில் கொலை செய்துவிடுவேன் என மிரட்டிய மொரோக்கா நாட்டினைச் சேர்ந்தவர் மீதான வழக்கு இன்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

- Advertisment -

குடி, ஓசி சோறு

அல் முராக்காபாத்தில் இருக்கிறது அந்த உணவகம். பணியாளர்கள் அன்றாட வேலைகளில் மூழ்கியிருந்த நேரத்தில் திடீரென சப்தம் கேட்டு ஓடிவந்திருக்கிறார்கள். 40 வயதான மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த நபர் உணவகத்தை உடைத்துவிடுவதாக மிரட்டியிருக்கிறார். போதையில் வாய் குளர, இலவசமாக உணவு வேண்டும் என குடிகார ஆசாமி தெரிவித்திருக்கிறார்.

சில பொருட்களையும் கீழே போட்டு உடைக்கவே, அவருக்கு உணவு வழங்கவேண்டாம் என உணவகத்தின் உரிமையாளர் தனது பணியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். உணவு வழங்கவில்லை எனில் பணியாளரை கொன்றுவிடுவேன் என குடிகாரர் தெரிவிக்க உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குடித்துவிட்டு வன்முறையில் ஈடுபட்ட நபரை கைது செய்து அழைத்துச்சென்றனர். பணியாளருக்கு மிரட்டல் விடுத்ததாக அவர் மீது பொது வழக்குத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.