UAE Tamil Web

துபாயில் தன் நாட்டுக்காரரை கடத்தி சென்று 6 மணி நேரம் கொடூர சித்திரவதை செய்த நைஜீரியர்கள்.! அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்…

court

துபாயில் தங்களது நாட்டுக்காரர் ஒருவரை கடத்தி வைத்து சுமார் 6 மணி நேரம் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து சித்திரவதை செய்த, இரண்டு நைஜீரிய ஆண்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழக்கியுள்ளது.

- Advertisment -

பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுக்கும், கைது செய்யப்பட்ட பிரதிவாதி ஒருவரின் சகோதரருக்கும் இடையில் நைஜீரியாவில் ஏற்பட்ட மோதல்களை அடுத்து இந்த குற்றசம்பவம் துபாயில் நிகழ்த்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நைஜீரியர் துபாயில் தனது சொந்த நாட்டை சேர்ந்தவர்களால் கடத்தி செல்லப்பட்டார்.

நைஜீரியாவில் உள்ள பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் சிலர், 34 வயதான பிரதிவாதி ஒருவரின் சகோதரரை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரதிவாதி, துபாயில் இருக்கும் தன்னை மிரட்டியவர்களின் உறவினரை(பாதிக்கப்பட்டவரை) கடத்த திட்டமிட்டார்.

தனது திட்டத்தை செயல்படுத்த தனது நாட்டை சேர்ந்த மூவரின் உதவியை நாடினார். கடந்த மே மாதம் பர் துபாயில் உள்ள இல்லத்தில் இருந்து பாதிக்கப்பட்டவரை கடத்தினர். அவரை கட்டி டாக்ஸி ஒன்றில் ஏற்றிக்கொண்டு ஷார்ஜாவிற்கு சென்றனர். ஷார்ஜாவில் பெரு இடத்தில் வைத்து பாதிக்கப்பட்டவரை, பிரதிவாதிகள் உடல் ரீதியாக கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதலை தாக்குதலை பதிவு செய்து அந்த வீடியோ கிளிப்பை நைஜீரியாவுக்கு அனுப்பினார் முதல் பிரதிவாதி .

சுமார் 6 மணி நேரம் அவரை கட்டி போட்டு உதைத்த குமபல், அவரது உடலின் பல இடங்களிலும் சிகரெட்டுகளால் சூடு வைத்து சித்திரவதை செய்துள்ளது. அதன் பிறகு அவரை விடுவித்துள்ளது. அவர்களிடமிருந்து வெளியேறிய பாதிக்கப்பட்டவர், நேரே துபாய் போலீஸிடம் சென்று புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவரை கடத்தி வைத்து, தாக்கியதாக 2 நைஜீரிய ஆண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த முதல் நிகழ்வு துபாய் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. சிறைவாசத்திற்கு பின் பிரதிவாதிகளை நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.