UAE Tamil Web

போலீஸ் போல நடித்து 14 லட்சம் திர்ஹம்ஸ் பணம் பறித்த கும்பல் – நிஜ போலீசிடம் சிக்கிய வேடிக்கை..!

dubai-court

காவல்துறையினர் போல நடித்து 14 லட்சம் திர்ஹம்ஸ் பணத்தைக் கொள்ளையடித்த நான்கு பேர் கொண்ட கும்பலை துபாய் காவல்துறையினர், குற்றம் நடந்த 7 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்தனர்.

- Advertisment -

பாதிக்கப்பட்டவரை தனியான இடத்திற்கு அழைத்துச்சென்று, அவரிடமிருந்த 14 லட்சம் திர்ஹம்ஸ் பணம், மொபைல் போன் ஆகியவற்றை இக்கும்பல் அபகரித்ததாக நைஃப் காவல் நிலையத்தின் இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் தாரிக் முகமது நூர் தஹ்லக் (Tariq Mohammad Noor Tahlak) தெரிவித்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவரிடமிருந்து புகார் பெறப்பட்ட உடனேயே தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. குற்றச் செயலில் ஈடுபட்ட நால்வருள் இருவரை காவல்துறை துரிதமாக கண்டுபிடித்திருக்கிறது.

பாதிக்கப்பட்டவர் சென்ற பாதையில் தேடுதல் வேட்டையைத் தொடங்கியது காவல்துறை. இதன் காரணமாக இரு குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து 265,000 திர்ஹம்ஸ் பணத்தைக் காவல்துறையினர் கைப்பற்றியிருக்கின்றனர்.

முதலில் காவல்துறையினர் போல, காவல்துறையினரிடமே நடித்திருக்கிறார்கள் இந்தத் திருடர்கள். அதன்பின்னர் தப்பிப்பதற்கு வழியில்லை எனத் தெரிந்ததும் காவலர்களிடம் சரணடைந்துள்ளனர்.

இருவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் காரணமாக தலைமறைவாக இருந்த இருவரை போலீஸார் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து மீதிப் பணத்தையும் மீட்டு பாதிக்கப்பட்டவரிடம் ஒப்படைத்திருக்கிறது காவல்துறை.

நான்கு குற்றவாளிகளும் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டதால் இந்த வழக்கு மேற்கட்ட விசாரணைகளுக்காக பொது வழக்குத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.