UAE Tamil Web

அபுதாபியில் அட்டூழியம்.! பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோவை சமூக ஊடகங்களில் ஷேர் செய்த இளைஞர்கள்.. ஒரே நாளில் கைது

arrest.pg

அபுதாபியில் ஒரு பெண்ணை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்து அந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து, சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞர்கள் அடங்கிய கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அபுதாபி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

- Advertisment -

சம்பவம் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ள அமீரக அட்டர்னி ஜெனரல் டாக்டர் ஹமாத் சைஃப் அல் ஷம்ஸி, இந்த அதிர்ச்சியூட்டும் குற்றச்செயல் மீதுஃபெடரல் புலனாய்வு அலுவலகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சந்தேக நபர்களைக் கண்டறிந்தது. பின் அவர்கள் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து அபுதாபி போலீஸ் சில மணிநேரங்களிலேயே சந்தேகநபர்களை கைது செய்தது. இப்போது அரசு வழக்கறிஞரின் நேரடி மேற்பார்வையின் கீழ் விரிவான விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய குற்றத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி வழங்கப்படும் என்றும் ஹமாத் சைஃப் உறுதியளித்தார். மேலும் பேசிய அவர் அமீரகத்தில் இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் குற்றம் அரிதானது என்றாலும், அதிகாரிகள் சமூகத்தைப் பாதுகாப்பதற்கான எந்த முயற்சியையும் விடவில்லை என்றார்.

தங்கள் குழந்தைகளின் மீது குடும்ப உறுப்பினர்கள் எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும், அவர்களின் பாதுகாப்பை எல்லா நேரங்களிலும் உறுதிப்படுத்த வேண்டும். எமிராட்டி சமுதாயத்தின் ஒழுக்கங்களையும், சமூக விழுமியங்களையும் மீறுபவர்களுக்கு எதிராக அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று அல் ஷம்சி உறுதிபட கூறியுள்ளார்.