UAE Tamil Web

அமீரகத்தில் அடித்து நொறுக்கப்பட்ட இந்தியரின் கடை : 14,735 திர்ஹம்ஸ் மற்றும் 86 ஐபோன்கள் திருட்டு..!

-Dubai-Courts

துபாயின் நைஃப் பகுதியில் இயங்கிவரும் இந்தியர் ஒருவரது மொபைல் கடையில் திருடியவர்கள் மீதான வழக்கு இன்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதித்தனர். மேலும் கூடுதலாக 369,090 திர்ஹம்ஸ் தொகையை அபராதமாக நீதிமன்றம் விதித்துள்ளது.

நொறுக்கப்பட்ட கடை

கேமரூன் நாட்டினைச் சேர்ந்த 3 பேர்கொண்ட கும்பல் இந்தாண்டு மே மாதம், இந்தியரது கடையின் கதவுகள் மற்றும் சிசிடிவி கேமராவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார்கள்.

355,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள 86 ஐபோன்கள் மற்றும் லாக்கரில் இருந்த 14,735 திர்ஹம்ஸ் பணத்தை இந்தக் கும்பல் திருடியிருக்கிறது.

சம்பவம் நடந்த அன்று, அதிகாலை 4 மணிக்கு தனது கடையில் திருட்டு நடைபெற்றதாக போன் மூலமாக தகவல் அளிக்கப்பட்டது என கடையின் உரிமையாளர் காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார்.

பல்வேறு மாடல்களில் வைக்கப்பட்டிருந்த ஐபோன்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கும்பல் திருடியிருப்பதாக நைஃப் காவல்நிலையத்தில் கடையின் உரிமையாளர் புகாரளித்திருக்கிறார்.

கடைக்கு அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்ட காவல்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். 3 பேர் கொண்ட கும்பல் திருடிய போன்களை தனது நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் கொடுத்திருக்கிறார்கள்.

காவல்துறை முதலில் திருட்டுப் பொருளை வாங்கிய நபரைக் கைது செய்திருக்கிறது. அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் திருட்டுக் கும்பலும் காவல்துறையிடம் சிக்கியிருக்கிறது.

விசாரணையின்போது தங்களது குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். மூவர் மீதும் திருட்டு, மற்றும் பொருட்களை சேதப்படுத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேலும் நான்காவது நபர் மீது, திருட்டுப் பொருட்களை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவரை தகாத செயல்களுக்கான நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

-Dubai-Courts
0 Shares
Share via
Copy link