UAE Tamil Web

மசாஜ் செய்து விடுவதாக ஆசை வார்த்தை.! மசியாத கால்பந்து வீரரை கும்பலாக தாக்கி கொள்ளையடித்த பெண்.. அதிரடி தீர்ப்பு அறிவித்த நீதிமன்றம்

court

துபாயில் ஒரு நைஜீரிய கால்பந்து வீரர் மீது சில பெண்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தி, அவரிடம் வழிப்பறி செய்த 33 வயதான உகாண்டா பெண் ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

- Advertisment -

துபாய் முதல் நிகழ்வு நீதிமன்ற பதிவுகளின்படி, கடந்த பிப்ரவரி மாதம் 26 வயதான நைஜீரிய கால்பந்து வீரர் ஒருவர் மாலை 7 மணியளவில் நைஃப் பகுதியில் பார்க் செய்யப்பட்டிருந்த தனது காரை எடுக்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து அவரை தடுத்து நிறுத்திய பிரதிவாதியான உகாண்டா பெண், கால்பந்து வீரரை மசாஜ் மற்றும் பாலியல் சேவை வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளார்.

ஆனால் பெண்ணின் வலையில் விழ விரும்பாத வீரர் தான் மசாஜ் செய்ய விரும்பவில்லை என்று கூறி நிராகரித்தார். இதனால் கோபமடைந்த அந்த பெண் அவரை கீழே தள்ளி தாக்க துவங்கியுள்ளார். அப்போது திடீரென அங்கு கூடிய 7 முதல் 10 பெண்கள் அடங்கிய குழு உகாண்டா பெண்ணுடன் சேர்ந்து அவரை தாக்க துவங்கினர். அந்த உகாண்டா பெண் 2,500 திர்ஹம்ஸ் மதிப்புள்ள அவரது தங்கச் சங்கிலி, ஒரு விலையுயர்ந்த கடிகாரம் மற்றும் அவரது வாலட்டில் இருந்த 3,715 திர்ஹம்ஸ் பணத்தை பறித்தார். மற்றொருவரோ அவரை கடித்துள்ளார். இதில் அவரது இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

தாக்குதலால் நிலைகுலைந்த அந்த நைஜீரியர் பயந்து அந்த இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளார். பின் ஒரு நண்பருடன் சம்பவ இடத்திற்கு திரும்பி வந்த போது உகாண்டா பெண் மட்டுமே இருந்துள்ளார். மற்ற பெண்கள் தப்பித்து விட்டனர். நண்பருடன் சேர்ந்து அந்த பெண்ணை பிடித்த அவர், நேரே நைஃப் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் அளித்துள்ளார். அதன் பின்னரே மருத்துவ அறிக்கையைப் பெற துபாய் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அந்த நைஜீரியர்.

அந்த உகாண்டா பெண் மீது கொள்ளை மற்றும் விபச்சாரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உகாண்டா பெண்ணிற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 6,215 திர்ஹம்ஸ் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. சிறைவாசத்திற்கு பின் அப்பெண் நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.