UAE Tamil Web

துபாய் : லிஃடிற்குள் இந்தியப் பெண்ணிற்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த இந்தியர்..!

elevator-lift-generic_

தனது குடியிருப்பு வளாக லிஃப்டிற்குள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்தியாவைச் சேர்ந்த பெண் தொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட 39 வயதான இந்தியர் மீதான வழக்கு இன்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

- Advertisment -

பாலியல் தொல்லை

சம்பவம் நிகழ்ந்த அன்று, இரவு 10 மணிக்கு அல் நஹ்தாவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார் இந்தியாவைச் சேர்ந்த இல்லத்தரசியான பாதிக்கப்பட்ட பெண். அப்போது யாரோ தன்னை பின்தொடர்ந்து வருவதை அவர் உணரவே வேகமாக நடந்து தனது குடியிருப்பு வளாகத்தின் லிஃப்டிற்குள் தஞ்சம் புகுந்திருக்கிறார்.

ஆனால் அந்தப் பெண்ணைத் துரத்திச்சென்ற இந்தியர் தானும் லிஃப்டிற்குள் நுழைந்திருக்கிறார். இந்தியாவில் இருந்து விசிட்டிங் விசாவில் வந்தவரான இந்த ஆசாமி பெண்ணின் மார்பகங்களை தொட்டிருக்கிறார். உதவிகேட்டு அப்பெண் சப்தம் எழுப்பவே இந்திய ஆசாமி அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.

தனது கணவரிடம் நடந்ததை அழுகையுடன் அந்தப் பெண் தெரிவிக்கவே, உடனடியாக காவல்துறையினரிடம் விஷயத்தை எடுத்துச்சென்றிருக்கிறார் அவர். விசாரணையை முன்னெடுத்த துபாய் காவல்துறை குற்றவாளியை கைதுசெய்து பொது வழக்கு விசாரணைக்கு உட்படுத்தியது.

இந்தியரின் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விசாரணையின்போது தனது குற்றத்தை இந்தியர் ஒப்புக்கொண்டார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.