UAE Tamil Web

கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் கணவன் மீது வழக்குத் தொடுத்த மனைவி..!

court

ஷார்ஜா குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று வித்தியாசமான வழக்கு ஒன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனைவியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட 30 வயது ஆண் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

- Advertisment -

கையும் களவும்

குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவி வேறு ஒரு ஆண் நபருடன் தொடர்பில் இருக்கையில் செல்போனில் புகைப்படம் எடுத்திருக்கிறார். மேலும், இருவருக்கும் இடையிலான மெசேஜ்களையும் கணவர் சேகரித்து வைத்திருக்கிறார்.

இந்த விஷயத்தை தனது மனைவியின் அப்பாவிடத்தில் கொண்டுசென்றிருக்கிறார் பாதிக்கப்பட்டவர். தனது இரு குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும்பொருட்டு குறிப்பிட்ட தொகையை அளிக்குமாறு கணவர் கேட்டிருக்கிறார். புகைப்படங்கள் மற்றும் மெசேஜ்களை தனக்கு அனுப்புமாறு பாதிக்கப்பட்டவரின் மாமனார் கேட்டிருக்கிறார்.

ஆனால், அடுத்தநாள் தன் கணவர் தன்னுடைய நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் புகைப்படங்களை உருவாக்கியிருப்பதாக தந்தையின் உதவியுடன் வழக்குத் தொடுத்திருக்கிறார் அந்தப் பெண். வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததோடு அவரை நிரபராதி எனத் தெரிவித்திருக்கிறது.

தற்போது தனது தந்தையின் உதவியுடன் மேலவை நீதிமன்றத்திற்கு வழக்கை எடுத்துச் சென்றிருக்கிறார் அந்தப் பெண்.