UAE Tamil Web

முன்னாள் மனைவியின் தந்தையிடம் 435,000 திர்ஹம்ஸ் கேட்ட அரபு ஆண்.! கோரிக்கையை ஏற்றதா நீதிமன்றம்.?

court

தனது முன்னாள் மனைவியின் தந்தைக்கு தான் கார் வாங்கி தந்ததாகவும், அதற்காக செலவு செய்த சுமார் 435,000 திர்ஹம்ஸ் பணத்தை முன்னாள் மாமனார் தனக்கு தர உத்தரவிட வேண்டும் என்ற அரபு ஆண் அளித்த கோரிக்கையை ரஸ் அல் கைமா சிவில் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

- Advertisment -

அந்த அரபு மனிதர் தனது மனுவில், முன்னாள் மனவியுடன் திருமணம் செய்து கொண்ட நேரத்தில், தனது தந்தைக்கு ஒரு கார் வாங்க வேண்டும் என்று கேட்டதால் 435,000 திர்ஹம்ஸ் பணம் மனைவியிடம் கொடுத்ததாகவும், அந்த பணம் போதவில்லை என்று கூறி நான் அவருக்காக வாங்கி வைத்திருந்த நகைகளையும் விற்று காருக்கு பணம் செலுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் தனது முன்னாள் மனைவியின் சகோதரனுக்காகவும் ஒரு காரை வாங்கியதாகவும் கூறினார். தவிர தனது முன்னாள் மனைவியின் தந்தையின் பராமரிப்பு பணிகளுக்கும், மாதாந்திர பண உதவி வழங்கி வந்ததாக மனுவில் கூறி இருந்தார்.

இருப்பினும் அந்த அரபு நபர் தனது உரிமை கோரல்களை சாட்சிகள், ரசீதுகள் அல்லது ஆவணங்களை சமர்ப்பித்து உறுதிப்படுத்த தவறிவிட்டார். தேவையான ஆதாரங்கள் எதையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல், தனது முன்னாள் மாமனார் தனது வாதத்திற்கு பதிலளிக்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

வாதத்தில் பங்கேற்ற அரபு மனிதரின் முன்னாள் மாமனார், அந்த மனிதரின் கருத்துக்கள் அனைத்தையும் மறுத்ததோடு, அனைத்துமே ஆதாரமற்ற உரிமை கோரல்கள், நான் எனது மகளின் முன்னாள் கணவரிடமிருந்து எந்த பணத்தையும் பெறவில்லை என்று தெரிவித்தார். முன்னாள் மனைவியுடைய தந்தையின் சத்தியப்பிரமாண மறுப்பின் அடிப்படையில், உரிமை கோரல்களுக்கான ஆதாரங்களை நிரூபிக்கத் தவறியதாக கூறி அரபு மனிதர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தது.