UAE Tamil Web

துபாயில் பரபரப்பு: பேய் விரட்டுவதாகக் கூறி காதலியின் கழுத்தை நெரித்துக்கொன்ற காதலன் – போலீசார் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்..!

police dubai

துபாய்: அல் பார்ஷாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகம் ஒன்றிலிருந்து காவல்துறைக்கு அன்று ஒரு போன்கால் வந்திருக்கிறது. பிளாட்டினுள் இளம்பெண் ஒருவர் நினைவிழந்து கிடப்பதாக போலீசாரிடம் சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisment -

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் 20 வயது மதிக்கத்தக்க அந்த இளம்பெண்ணின் சடலத்தை மீட்டனர். அப்பெண்ணுடன் தங்கியிருந்த 40 வயதான ஆப்பிரிக்க நபர் தான் காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

பேய் பிடித்திருக்கிறது

“எனது காதலிக்கு திடீரென பேய் பிடித்துவிட்டது. அதனை விரட்டும் முயற்சியில் நான் இறங்கினேன். அப்போது அவள் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டாள்” என ஆப்பிரிக்க ஆசாமி காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்.

பெண்ணின் உடம்பில் ஏராளமான காயங்கள் மற்றும் ரத்தக் கசிவு இருந்ததை காவல்துறை உறுதி செய்திருக்கிறது. குற்றவியல் பிரவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மரணத்திற்கு முக்கியக் காரணம் பெண்ணின் காதலர்தான் என்பது தெளிவாகியிருக்கிறது.

3 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்துவந்த இந்த இணையர்களுக்குள் பணப்பரிமாற்றம் தொடர்பாக சச்சரவு எழுந்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் கைமீறிச் சென்றிருக்கிறது. அப்போது போதைமருந்து உட்கொண்டிருந்த அந்நபர் தனது காதலியை தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்.

துபாய் காவல்துறையின் தடயவியல் மற்றும் குற்றவியல் பிரிவின் கீழ் உள்ள குற்றக்காட்சித் துறையின் இயக்குனர் மக்கி சல்மான் அகமது (Makki Salman Ahmed) இதுகுறித்துப் பேசுகையில்,” கிடைத்த தடயங்களின் அடிப்படையில் இறந்துபோன பெண்ணின் காதலர்தான் இந்தக் கொலையை செய்தார் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். அதன்பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் தனது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்” என்றார்.