UAE Tamil Web

துபாய்: மது போதையில் இலவச உணவு கேட்டு தகராறு.! ஹோட்டல் ஊழியரை கொன்று விடுவதாக மிரட்டிய நபருக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம்

free

இலவச உணவு தர மறுத்ததை அடுத்து உணவகத்தை சேதப்படுத்துவதாகவும், அதில் வேலை பார்க்கும் தொழிலாளர்களில் ஒருவரை கொலை செய்வதாகவும் மிரட்டல் விடுத்து அச்சுறுத்திய நபருக்கு துபாய் முதல் நிகழ்வு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 40 வயதான மொராக்கோ நாட்டை சேர்ந்த நபர், துபாயின் அல் முரகாபாத் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு இலவச உணவு கேட்டு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு உணவு தர உணவக ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் கோபமுற்ற அந்த பிரதிவாதி உணவகத்தை சேதப்படுத்துவதாகவும், தொழிலாளர்களில் ஒருவரை கொலை செய்வதாகவும் அச்சுறுத்தியுள்ளார். இதனை அடுத்து ஊழியர்கள் உரிமையாளருக்கு கால் செய்து பிரதிவாதி தகராறு செய்யும் விஷயத்தை கூறி உள்ளனர். எனவே உணவக உரிமையாளர் துபாய் போலீசுக்கு தகவல் அளித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் தகராறில் ஈடுபட்டவரை கைது செய்தனர். துபாய் பொது வழக்கு பிரதிவாதி மீது கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டியது

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘இதற்கு முன் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உணவகத்தின் கதவை சேதப்படுத்தியதால் பிரதிவாதிக்கு எந்த உணவையும் கொடுக்க வேண்டாம் என உணவக உரிமையாளர் எங்களிடம் முன்பே அறிவுறுத்தி இருந்தார். அதனால் தான் பிரதிவாதிக்கு இலவச உணவு வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக 49 வயதான உணவக ஊழியர் ஒருவர் சாட்சியம் அளித்தார். மேலும் தகராறில் ஈடுபட்ட பிரதிவாதி மது போதையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதிவாதி மீதான புகார் உறுதியானதை அடுத்து அவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை வழங்கியும், சிறை தண்டனையை அனுபவித்த பின் அவரை நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரதிவாதி இந்த தீர்ப்பை 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.

free
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap