UAE Tamil Web

துபாய் விமான நிலையம்: கொரோனா பரிசோதனை சான்றிதழில் தேதியை மாற்றிய நபருக்கு நேர்ந்த கதி..!

Dubai Airports turns 60

அமீரகத்தில் வசித்துவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். அவர் கொண்டுவந்த கொரோனா பரிசோதனை சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

- Advertisment -

மீண்டும் ஒருமுறை பரிசோதனை எடுத்துவரும்படி விமான நிலைய ஊழியர் கூற, அங்கிருந்து சென்ற பாகிஸ்தானி நபர் கொரோனா சான்றிதழ் செல்லுபடியாகும் வகையில் தேதியை மாற்றிவிட்டு மீண்டும் வந்திருக்கிறார்.

இதனைக் கண்டுபிடித்த அதிகாரி, இதுகுறித்து துபாய் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்துப் பேசிய விமான நிலைய அதிகாரி,” முதலில் அவர் வருகையில் அவருடைய பரிசோதனை சான்றிதழ் செல்லுபடியாகும் கால அளவினைக் கடந்துவிட்டது. ஆகவே மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்துவிட்டு வரும்படிக் கூறினேன். ஆனால் 30 நிமிடத்தில் மீண்டும் வந்தவர், செல்லுபடியாகும் சான்றிதழை வைத்திருந்தார். அதனைக் கண்காணித்தபோது அதில் தேதி மாற்றப்பட்டது தெரியவந்தது” என்றார்.

இதுகுறித்துப் பேசிய குற்றம் சாட்டப்பட்ட 32 வயது பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் தான் ஷார்ஜாவில் மூன்று நாட்களுக்கு முன்னர் கொரோனா பரிசோதனை எடுத்ததாகவும் அதன் பின்னர் நாடுதிரும்ப முடிவெடுத்ததாகவும் தெரிவித்தார். தனது தாய்நாட்டைச் சேர்ந்த தனது நண்பர் ஒருவரிடம் இவர் உதவிகேட்க, அவரும் சான்றிதழில் தேதியை மாற்றியிருக்கிறார்.

இப்போது நண்பர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மோசடி மற்றும் போலி ஆவணத்தைப் பயன்படுத்திய குற்றத்திற்காக இருவர் மீதும் வழக்குத் தொடர்ந்திருக்கிறது துபாய் பொது வழக்குத்துறை.

இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.