UAE Tamil Web

சிடி விற்பனை அமோகம்; கைப்பற்றப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச சிடிக்கள்..!

CD

ஷார்ஜாவில் ஆபாச சிடிக்களை விற்பனை செய்துவந்த கும்பலை காவல்துறை கைதுசெய்திருக்கிறது. ஆசியாவில் தயாரிக்கப்பட்ட இந்த சிடிக்களை நகல் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுவந்த இந்த கும்பலிடமிருந்து ஆயிரக்கணக்கான ஆபாச சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

- Advertisment -

இந்தக் கும்பல் இண்டஸ்ட்ரியல் பகுதிகளில் இந்த சிடிக்களை அதிகளவு விற்பனை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும், ஆன்லைனில் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட கும்பல் ஒன்றினையும் ஷார்ஜா காவல்துறை கைது செய்திருக்கிறது.

“இந்த சைபர் குற்றவாளிகள் குழந்தைகளிடையே ஆபாச வீடியோக்களைப் பரப்புகிறார்கள். உங்களுடைய குழந்தைகள் இணையத்தில் அதிகநேரம் செலவிட்டால் அவர்களை உடனடியாக கவனிப்பது நல்லது. அவர்கள் இணையத்தில் என்ன செய்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து கண்காணியுங்கள்” என காவல்துறை எச்சரித்துள்ளது.

காவல்துறையின் குற்றவியல் தடுப்புப் பிரிவு அளித்துள்ள அறிக்கையின்படி ஷார்ஜாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் அதிகளவில் பதிவாகியிருக்கின்றன.

“உங்களுடைய குழந்தைகளை கவனமாக கவனித்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு யாரேனும் தீங்கிழைத்தால் உடனடியாக காவல்துறையை அணுகவும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.