UAE Tamil Web

கம்பெனியின் 44,600 திர்ஹம்ஸ் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய PRO கைது.! வசமாக சிக்கியது எப்படி.?

arrest

அமீரகத்தில் தான் பணிபுரியும் நிறுவனம் பணிநிமித்தமாக வழங்கிய 44,600 திர்ஹம்ஸ் நிதியை முறைகேடாக பயன்படுத்திய மக்கள் தொடர்பு அதிகாரி(PRO) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் ஒரு பொது நிறுவனத்திடமிருந்து சுமார் 44,600 திர்ஹம்ஸ் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவரை, பொது நிதி வழக்கு விசாரணை( Public Funds Prosecution) குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையை தொடங்கிய பொது நிதி வழக்கு விசாரணையின் மூத்த தலைமை வழக்கறிஞர் மற்றும் ஆலோசகர் சலீம் அகமது பின் கதேம் கூறுகையில் , கைது செய்யப்பட்டுள்ள PRO துபாயில் ஒரு பொது நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

பல்வேறு அரசுத் துறைகளுடன் நிறுவன பரிவர்த்தனைகளை மேற்கொள்வது, அந்த பரிவர்த்தனைகளை முடிக்க நிறுவனத்திடமிருந்து நிதி பெறுதல் மற்றும் பரிவர்த்தனை ரசீதுகளை கணக்குத் துறைக்கு சமர்ப்பித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார். சுமார் 8 மாதங்கள் அவர் இந்த பணிகளை கவனித்து வந்துள்ளார்.

இதனிடையே நிறுவன அமைப்பின் படி, பல்வேறு துறைகளுடன் தேவையான பரிவர்த்தனைகளை முடிக்க பிரதிவாதிக்கு தங்களது நிதித்துறை மூலம் தவணை முறையில் சுமார் 44,671 திர்ஹம்ஸ் வரை வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நிறுவனம் கூறியுள்ளது.

நிறுவனம் நடத்திய தணிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவர் பரிவர்த்தனைகளுக்கான ரசீதுகளை வழங்காமல் இருந்தது கண்டறியப்பட்டது. இது பற்றி அவரிடம் கேட்ட போது தான் அந்த பணத்தைப் பயன்படுத்தி கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். முறைகேடாகப் பயன்படுத்திய பணத்தை திருப்பி தர ஒரு வார கால அவகாசமும் கோரினார்.

அவரது சமாதானத்தை ஏற்க மறுத்த நிறுவனம் சம்பவம் பற்றி காவல்துறையில் புகாரளித்தது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் பணியாளர் விசா விண்ணப்பங்களுக்கான தொழிலாளர் கட்டணங்களை அவர் செலுத்த தவறியதால், அவரால் நிறுவனத்திற்கு மேலும் சில நிதி சிக்கல்கள் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. குற்றப்பத்திரிகையின் படி அபராதம் விதிக்க பிரதிவாதி குற்றவியல் நீதிமன்றத்திற்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

arrest
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap