UAE Tamil Web

ஒட்டகத்தைத் திருடி உருவத்தை மறைக்க முடியாமல் சிக்கிக்கொண்ட பாகிஸ்தான் ஆசாமி..!

steals camel

துபாய் நீதிமன்றத்தில் இன்று வித்தியாசமான வழக்கு ஒன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 40 வயதான எமிராட்டி பண்ணையாளர் ஒருவர் தன்னிடம் வேலைபார்த்து வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 22 வயது இளைஞன் மீது புகார் அளித்திருந்தார். அதுவும் 10,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள ஒட்டகத்தைத் திருடியதாக.

- Advertisment -

துபாயின் அல் ஹிபாப் பகுதியில் உள்ள ஒட்டகப் பண்ணையில் பணிபுரிந்துவந்திருக்கிறார் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பாகிஸ்தான் இளைஞர். தனது கட்டுப்பாட்டில் இருந்த ஒட்டகங்களில் ஒன்றை முதலாளிக்குத் தெரியாமல் கடத்தி அல் மர்மோம் சந்தையில் விற்று காசாக்கியிருக்கிறார்.

ஒட்டகத்தைக் காணாமல் தேடிய ஏமிராட்டி முதலாளி, அக்கம்பக்கம் விசாரித்திருக்கிறார். பாகிஸ்தான் பிரகஸ்பதி ஒட்டகத்தை சந்தையில் விற்றதை அவர்கள் மூலமாக அறிந்துகொண்ட முதலாளி, உடனடியாக துபாய் காவல்துறையினரிடம் புகார் அளித்திருக்கிறார்.

கடத்திச் சென்றது, திருட்டு ஒட்டகத்திற்கு சந்தையில் பேரம் பேசியது என கையும் களவுமாக சிக்கியிருக்கிறார் இளைஞர். யாருக்கும் தெரியாமல் ஒட்டகத்தைக் கடத்த பிளான் செய்து, இறுதியில் அதன் உருவத்தை மறைக்க முடியாமல் தோற்றும் போயிருக்கிறார். துபாய் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இப்போது இளைஞர் இருக்கிறார். ஒட்டகத்தை திருடியதாக இளைஞர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

பொது வழக்குத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்த வழக்கில் டிசம்பர் 21 ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.