UAE Tamil Web

திருடிய பணப்பெட்டியை தூக்க முடியாமல் லாரியில் வைத்து எடுத்துச்சென்ற இரு ஆசிய இளைஞர்கள் – காவல்துறையிடம் சுலபமாக சிக்கினர்..!

NAT-SHUTTERSTOCK-ROBBERS

துபாயில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் இரு பாகிஸ்தான் இளைஞர்கள் திருடிய வழக்கு துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

லாரியில் திருட்டு..

நிறுவனத்தில் செக்யூரிட்டி இல்லை என்பதைத் தெரிந்து வைத்திருந்த இந்த இரு இளைஞர்களும் துணிச்சலாக திறந்திருந்த ஜன்னல் வழியாக உள்ளே சென்றிருக்கிறார்கள். பணம் வைக்கப்பட்டிருந்த சேஃப் (Safe) ஐ அலேக்காகத் தூக்கிக்கொண்டு வெளியே வரும்போது வளாகத்திற்குள் நின்றிருந்த ட்ரக்கை இருவரும் பார்த்திருக்கிறார்கள்.

உள்ளே எட்டிப்பார்க்க சாவியுடன் வாகனம் தேமே வென்று நின்றிருக்க, பெட்டியைத் தூக்கி ட்ரக்கிற்குள் வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள். லேபாப் பகுதிக்கு சென்றவுடன் திருடப்பட்ட 352,000 திர்ஹம்ஸ் பணத்தை ஆளுக்குப் பாதியாக எடுத்துக்கொண்டு, ட்ரக்கை அங்கேயே விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அதே பகுதியில் இருந்த தனது சகோதரரிடம் 63,000 திர்ஹம்ஸ் பணத்தைக் கொடுத்து வைத்திருக்கச் சொல்லிவிட்டு மீதிப் பணத்தை தனது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறார் திருடர்களில் ஒருவர்.

சிக்கியது எப்படி?

அலுவலக ஊழியர் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறை, அடுத்த சில நிமிடங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலம் இரு திருடர்களையும் அடையாளம் கண்டனர். ட்ரக் விட்டுச்செல்லப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை வைத்து இருவரையும் கையும் களவுமாக காவல்துறை கைது செய்திருக்கிறது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

NAT-SHUTTERSTOCK-ROBBERS
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap