UAE Tamil Web

அமீரகத்தில் 25 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள 1,125 கிலோ போதைப்பொருள் சிக்கியது..!

Drugs

ராஸ் அல் கைமாவில் கடந்தாண்டு மட்டும் காவல்துறை நடத்திய சோதனை வேட்டையில் 25 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள 1,125 கிலோகிராம் போதைப்பொருள் சிக்கியதாக ராஸ் அல் கைமா காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய ராஸ் அல் கைமா காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இயக்குனர் கர்னல் இப்ராஹீம் ஜாசிம் அல் துனைஜி, அமீரகத்திற்குள் போதைப்பொருளை கடத்திவரும் பல திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“763 கிலோ ஒப்பியம் உட்பட, 1,125 கிலோகிராம் போதைப்பொருள் சிக்கியுள்ளது. இந்த கடத்தல் திட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்” என இப்ராஹீம் தெரிவித்தார்.

“போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து போலீஸ்காரர்களை தவறாக வழிநடத்த முயன்றனர், ஆனால் காவல்துறையினர் அவர்களை கையும் களவுமாகப் பிடித்தனர்” என இப்ராஹீம் தெரிவித்தார்.

Drugs
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap