கொரோனா விதிமுறைகளை மீறி, சமூக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக இரண்டு அமீரக இளைஞர்கள் மீது அபுதாபி காவல்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது.
வைரலான வீடியோ
ஒரு நபர் தனது கொரோனா பாசிடிவ் ரிசல்ட்டை ஏந்தியபடி பொதுவெளியில் வலம்வருகிறார். அதை மற்றொரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார். சற்று நேரத்திற்கெல்லாம் இந்த வீடியோ வைரலாக, காவல்துறை இரு இளைஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.
சட்டப்படி இந்த இளைஞர்களுக்கு 10,000 முதல் 50,000 திர்ஹம்ஸ் வரையில் அபராதம் மற்றும்/அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும். இது சகித்துக்கொள்ள முடியாத செயல் என்றும் குடியிருப்பாளர்கள் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் எனவும் பொது வழக்குத்துறை தெரிவித்திருக்கிறது.
கொரோனா பாதிக்கப்பட்டவர் அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கத்தில் இருந்தவர்கள் கட்டாயம் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பொது வழக்குத்துறை வலியுறுத்தியுள்ளது.