UAE Tamil Web

பழிவாங்கும் வெறியில் ஆணை பாலியல் பலாத்காரம் செய்த இருவர் – மரணதண்டனை கூட விதிக்கப்படலாம் என எச்சரித்த நீதிபதிகள்..!

jail

ராஸ் அல் கைமா: வளைகுடா நாட்டைச் சேர்ந்த இருவர் இளைஞர் ஒருவரை கடத்தி அவரை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட இருவருக்கு ராஸ் அல் கைமா குற்றவியல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இவர்களுடன் குற்றச்செயலில் ஈடுபட்ட 20 வயதிற்கு கீழ் உள்ள மற்றொரு நபருக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

பாதிக்கப்பட்ட இளைஞரை பாலியல் வன்புணர்வு செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாகவும் இவர்கள் மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்த நீதிமன்ற பதிவின்படி, பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் இரண்டு குற்றவாளிகள் குறித்து அவதூறான செய்திகளைப் பரப்பி உள்ளார். இதனால் கோபமடைந்த அந்த இரண்டு குற்றவாளிகளும் இளைஞரை பழிவாங்கும் நோக்குடன் இவ்வாறு நடந்து கொண்டதாக நீதிமன்ற பதிவுகள் தெரிவிக்கின்றன.

குற்றவாளிகளில் ஒருவர் பாதிக்கப்பட்ட இளைஞரை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அதனால் இவரும் சம்மதித்து அவர்களுடன் சென்றுள்ளார். சந்தித்தபின் பாதிக்கப்பட்ட இளைஞரை தொலைதூரத்தில் உள்ள பாலைவன பகுதிக்கு காரில் அழைத்துச் சென்று காரில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். அதன்பின் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரும் ஸ்டன் துப்பாக்கிகளைப் (stun guns) பயன்படுத்தி அவரின் வலது கை மற்றும் இடது தோள் பகுதியில் சுட்டுள்ளனர்.

இதனிடையே மூன்றாவது குற்றவாளி, பாதிக்கப்பட்ட இளைஞரின் வலது கையில் குத்தியுள்ளான். மூன்று பேரும் சேர்ந்து கடுமையாக அந்த இளைஞரைத் தாக்கியுள்ளனர். அதன்பின்பு குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அந்த இளைஞனை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மூன்றாவது நபர் அதை வேடிக்கை பார்த்துள்ளார்.

அதன்பின்னர், குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட இளைஞரை முதல் குற்றவாளியின் பண்ணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவரை மீண்டும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்த குற்றங்கள் அனைத்தையும் வீடியோ எடுத்து வைத்து, நடந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் வீடியோவை சமூகவலைதளத்தில் பரப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

ராஸ் அல் கைமா காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான இந்த மூன்று நபர்களையும் கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவர்களுக்கு ஆள்கடத்தல், துன்புறுத்தல், அவமதித்தல், பாலியல் பலாத்காரம் செய்தல், செய்த குற்றத்தை வீடியோ பதிவு செய்து மிரட்டுதல் போன்ற குற்றங்களின் கீழ் அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளிகள் செய்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, மூன்றாவது குற்றவாளி 20 வயதிற்கு கீழ் உள்ளவர் என்பதால் அவருக்கு 5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கானது மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கும் இவர்களின் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் பட்சத்தில் அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை கூட விதிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.