UAE Tamil Web

நடுத்தெருவில் வைத்து ஆசியாவைச் சேர்ந்த தொழிலாளர்களைத் தாக்கிய அரபு இளைஞர்கள் – காவல்துறை கொடுத்த பதிலடி – வைரலாகும் வீடியோ..!

attack

அமீரகத்தில் சாலை அல்லது கடையில் நின்றுகொண்டிருந்த ஆசியாவைச் சேர்ந்த தொழிலாளர்களை 4 அரபு இளைஞர்கள் துன்புறுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் இன்று வைரலானது.

தொழிலாளர்களின் மீது காலுறைகளை வீசியும் அவர்களைக் கேலி செய்தும் கீழே தள்ளியும் வம்பிழுத்த இளைஞர்கள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். வீடியோ வெளிவந்த உடனேயே அமீரக பொதுவழக்குத்துறை எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் இளைஞர்கள் நால்வரும் காவல்துறையால் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பிறர் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறை மற்றும் பிறரின் தனிப்பட்ட உரிமைகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதன் காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக Wam செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலினால் காயமடைந்த தொழிலாளர்கள் அவர்களை திருப்பித் தாக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி நெட்வொர்க் அல்லது எலெக்ட்ரானிக் தகவல் அமைப்பு மூலம் ஒருவருடைய தனிப்பட்ட உரிமைக்கு குந்தகம் விளைவித்தால் அமீரக சட்டப்படி அவருக்கு 5 லட்சம் திர்ஹம்ஸ் அபராதமும் ஜெயில் தண்டனையும் விதிக்கப்படும். பிறருடைய அனுமதியின்றி அவரது புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றுபவர்களுக்கும் இது பொருந்தும்.

சமூக வலைத்தளங்களில் செய்வதும் செய்யக்கூடாததும் பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

attack
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap