UAE Tamil Web

மனைவியுடன் தங்கியிருந்த ரூமை ரகசியமாக எட்டிப்பார்த்த ஹோட்டல் கிளீனர்.! கையும் களவுமாக பிடித்த அரபு ஆண்.. நீதிமன்றம் வழங்கிய தண்டனை.?

room

அமீரகத்தில் ஹோட்டல் ஒன்றில் அரபு தம்பதியர் தங்கியிருந்த ரூமை எட்டி பார்த்த ஹோட்டல் கிளீனர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

ராஸ் அல் கைமாவில் உள்ள ஹோட்டலில் ஒரு அரபு  தம்பதி ரூம் எடுத்து தங்கியிருந்தனர். அதே ஹோட்டலில் கிளீனராக பணியாற்றிய ஒரு நபர், அந்த தம்பதி தங்கியிருந்த ரூமை ரகசியமாக எட்டி பார்த்துள்ளார். ஆனால் இதனை எப்படியோ பார்த்து விட்ட அந்த ரூமில் இருந்த அரபு ஆண், தங்கள் ரூமை அநாகரிகமாக எட்டிப்பார்த்த கிளீனரைப் பிடித்து, உடனடியாக சம்பவம் பற்றி போலீசில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு ராஸ் அல் கைமா சட்ட மீறல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் பிரதிவாதியான ஹோட்டல் கிளீனர் குற்றவாளி என நிரூபனமானது. இதனை அடுத்து பிரதிவாதிக்கு 2 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பின்னர் பாதிக்கப்பட்ட அரபு மனிதர் இவ்வழக்கை ராஸ் அல் கைமா சிவில் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றார். அவரது மனுவில், நானும், என் மனைவியும் சந்தித்த தார்மீக சேதங்களுக்கு இழப்பீடு வேண்டும். ஏனெனில் தனியுரிமைக்காக குறிப்பிட்ட ஹோட்டலில் எடுத்த ரூமிற்கு நாங்கள் கூடுதல் பணம் செலுத்தினோம். ஆனாலும் இந்த அத்துமீறல் நடந்துள்ளது என்று அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

அரபு நபரின் வாதத்தை ஏற்ற சிவில் நீதிமன்றம், பாதிக்கப்பட்டவருக்கு பிரதிவாதியான கிளீனரும், வழக்கில் சம்பந்தப்பட்ட ஹோட்டலும் 50,000 திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. தவிர நீதிமன்ற கட்டணம் மற்றும் வக்கீல் கட்டணங்களையும் செலுத்த உத்தரவிட்டது.

room
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap