UAE Tamil Web

மரத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிய கும்பல் – “சிக்கினால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்” – அரசு அதிரடி..!

Tree on Fire

புஜைரா நகரத்திலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சார்ம் என்ற இடம். இங்குள்ள சித்ர் (Sidr) என்ற மரத்தில் தீ வைத்துவிட்டு ஒரு கும்பல் தப்பியோடியிருக்கிறது. மரத்தின் அடிப்பாகம் எரிந்து கருமையான நிறத்தில் புகையுடன் காட்சியளிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது தான் இந்த சம்பவத்தினை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.

- Advertisment -

இதுகுறித்துப் பேசிய புஜைரா நகராட்சியின் தலைமை இயக்குனரும் பொறியாளருமான முகமது சைஃப் அல் அஃப்காம்,” கண்டனத்திற்குரிய மற்றும் பொறுப்பில்லாத இந்த செயலை செய்தவர்களுக்கு எவ்வித பாரபட்சமும் காட்டப்படாது. இந்த பாதக செயலில் ஈடுபட்டவர்கள் யார் என விசாரித்துவருகிறோம். அவர்களுக்கு தண்டனை வாங்கித்தராமல் ஓயமாட்டோம். எந்த மரத்திற்கு தீங்கு விளைவித்தாலும் அதனை ஏற்க முடியாது. அது உள்ளூர் சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும்” என்றார்.

அமீரக அரசால் பாதுகாக்கப்பட்டுவரும் மரங்களுள் சித்ர் மரமும் ஒன்றாகும். வருங்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஆய்வுகள் நடத்தப்படும் என நகராட்சி இயக்குனர் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் எவ்வித விதிமீறல் குறித்தும் நகராட்சியிடம் புகாரளிக்க விரும்பினால் 80036 என்ற எண்ணினை அழைக்கலாம் என அஃப்காம் தெரிவித்தார்.