போலி பார்க்கிங் டிக்கெட்டைப் பயன்படுத்திய குற்றத்திற்காக 38 வயது அரபு ஆணிற்கு 3 மாத சிறைத்தண்டனை விதித்திருக்கிறது துபாய் குற்றவியல் நீதிமன்றம். மேலும், தண்டனைக்காலம் முடிவடைந்தவுடன் அவர் நாடுகடத்தப்படவேண்டும் எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
போலி டிக்கெட்
துபாயின் பிசினஸ் பே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது சொருகப்பட்டிருந்த RTA பார்க்கிங் டிக்கெட்டை பார்த்த பரிசோதகருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. அதை ஆய்வு செய்ததில் அக்மார்க் போலியான டிக்கெட் அது எனத் தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாய் காவல்துறையிடம் இந்த வழக்கை ஒப்படைத்தது.
நீதிமன்ற விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்நபர், பார்க்கிங் டிக்கெட் எடுக்க தம்மிடம் பணம் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
என்னப்பா.. காரெல்லாம் வச்சிருக்க… சரி விடுங்க..