UAE Tamil Web

போலி பாஸ்போர்ட்டுடன் துபாய் விமான நிலையத்தில் சிக்கிய நபர்..!

2020_dubai_international_airport

போலி பாஸ்போர்ட் மற்றும் போலியான அரசு சீல்களைப் பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எமிரேட்ஸ் விமானம் மூலமாக பயணிக்க முயற்சித்த அரபு நாட்டைச் சேர்ந்த 25 வயது இளைஞர் மீதான வழக்கு இன்று  துபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கடந்த ஜனவரி மாத இறுதியில், துபாய் விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் குற்றவாளி கொண்டுவந்த போர்டிங் பாஸ் காலியாக இருந்ததாக தெரிவித்திருக்கிறார்.

அவரிடம் இருந்த பாஸ்போர்ட் போலியானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் போலியாக அரசு சீல்களைப் பயன்படுத்தியதாகவும் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் தனக்கு ஏதும் தெரியாது எனத் தெரிவித்த இளைஞர், பின்பு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் 13,000 திர்ஹம்ஸ் செலுத்தி, ஐரோப்பிய யூனியன் பாஸ்போர்ட்டை வாங்கியதாக இளைஞர் காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார். இவர் கடந்தாண்டு டூரிஸ்ட் விசா மூலமாக துபாய்க்கு வந்ததாக அவர் கூறியிருக்கிறார்.

2020_dubai_international_airport
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap